ஆட்சி அதிகாரத்தில் இல்லாத போதும் முன்னாள் அமைச்சர், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரத்தித் தலைவர் மயில்வாகனம் உதயகுமார் ஆகியோர் தமது சொந்த நிதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க முன்வந்து திகா - உதயா நிவாரணத் திட்டத்தை ஆரம்பித்தனர்.
நுவரெலியா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த நிவாரணத் திட்டத்தில் முதலில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்ட போதும் பினனர் அது கொழும்பு மாவட்டத்தில் தற்காலிகாக வசித்து வரும் மலையக உறவுகளை நோக்கியும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தை பொருத்தவரை இதுவரை சுமார் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் அடங்கிய நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அதில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட மஸ்கெலியா மற்றும் சாமிமலை பிரதேசங்களில் சுமார் ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட பொகவந்தலாவ, நோர்வூட், டிக்கோயா போன்ற பகுதிகளில் ஆயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
ஹட்டன் பிரதேசத்தில் வெலிஓயா, செனன், குடாஓயா, ஆரியகம, காமினிபுர, உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று வட்டவளை பகுதியில் குயில்வத்த, லொனெக், பின்னோயா, கினிகத்தேன, கடவல உள்ளிட்ட பகுதிகளுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
கொட்டக்கலை பிரதேச சபைக்கு உட்பட்ட பிரசேத்தில் ஹெரிங்கடன் கொலனி, வூட்டன் கொலனி பத்தன கொலனி, சென்.கியையார், பிலிகன்டாமலை, கொரின், பெல்கிரேவியா, லோகி, கிளனமோரா, மிடில்டன், ட்ரூப், கட்டுக்கலை, ரத்னில்லகல கொலனி, தியசிரிபுர கொலனி போன்ற பகுதிகளில் சுமார் இரண்டாயிரம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட குயின்ஸ்பெரி கொலபத்தன, ரம்பொட புரொடொப், மடக்கும்பரை போன்ற பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு திகா - உதயா நிவாரண திட்டத்தின் கீழ் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
அக்கரபத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட அயோனா, சென்.மார்க்ரட், ஹோல்புரூக், கொலனி - தோட்டம், மெக்டொப், தியனில்ல கொலனி, எக்கங்கபுர கொலனி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் எழுநூறிற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட மட்டுக்கலை, சென்.கூம்ஸ், கேனஸ், கிளாஸ்கோ, ரதல்ல, வங்கிஓயா, ஈஸ்டெல் மற்றும் தலவாக்கலை - லிந்துலை நகர சபைக்கு உட்பட்ட பாமஸ்டன் கொலனி போன்ற பகுதிகளில் சுமார் ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாநகர சபைக்கு உட்பட்ட நேஸ்பி, மூன்பிளேன், பம்பரகல போன்ற பகுதிகளில் நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கும் திகா - உதயா நிவாரண பணி ஊடாக நிவாரணம் வழங்கப்பட்டது.
குறிப்பாக தனியார் தோட்டம் மற்றும் கொலனி போன்றவற்றில் வசிக்கும் அனைத்து வருமானம் இழந்த குடும்பங்களுக்கும் எவ்வித பேதங்களும் இன்றி திகா - உதயா நிவாரணத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் கொழும்பில் சிக்கித் தவித்துள்ள மலையக உறவுகளுக்கும் திகா - உதயா நிவாரணத் திட்டத்தின் கீழ் உதவிகள் செய்யப்பட்டுள்ளன.
ஆரம்பத்தில் நிதி உதவி செய்யப்பட்ட நிலையில் பின்னர் அவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் அவர்கள் வசிக்கும் இடத்திற்கே சென்று வழங்கப்பட்டு வருகிறது. மட்டக்குளி, மோதர, கொட்டாஞ்சேனை, ஆமர்வீதி, கிரேன்ட்பாஸ், மாதம்பிட்டி, புளூமென்டல், ஜிந்துபிட்டி, ஆட்டுப்பெட்டித்தெரு, மருதானை, நாராஹென்பிட்ட, மருதானை, கொஹுவல, களுபோவில, தெஹிவளை, கல்கிஸ்ஸ, இரத்மலானை, வௌ்ளவத்தை, பம்பலபிட்டி, கொள்ளுபிட்டி ராஜகிரிய போன்ற பகுதிகளில் இருந்து பதவி செய்துகொண்ட மலையக உறவுகளுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிவாரணப் பொதிகள் மற்றும் நிதி உதவி வழங்கும் பணிகளில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் மற்றும் பிரதித் தலைவர் மயில்வாகனம் உதயகுமார் ஆகியோர் நேரடியாக ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த திகா - உதயா நிவாரணத் திட்டம் எதிர்வரும் 11ம் திகதி ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும்வரை முன்னெடுக்கப்படும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.