கல்முனை மாநகர சபைக்கு கொரோனா தடுப்புக்கான ஆயுர்வேத மருந்து


அஸ்லம் எஸ்.மௌலானா-
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான ஆயுர்வேத மருந்துத் தொகுதியொன்று கல்முனை மாநகர சபைக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதனை இன்று திங்கட்கிழமை (18) கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களிடம் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் கே.சுகுணன் கையளித்தார்.
கல்முனை மாநகர முதல்வர் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ரொஷான் அக்தர், மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத் காரியப்பர், கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக், பிரதி ஆணையாளர் எம்.ஐ.பிர்னாஸ், கல்முனைப் பிராந்திய ஆயுர்வேத மருத்துவ இணைப்பாளர் டொக்டர் எம்.ஏ.நபீல், ஆயுர்வேத வைத்திய அதிகாரிகளான டொக்டர் எம்.வை.இஸ்ஹாக், டொக்டர் அப்துல் ஹை, டொக்டர் ஏ.எஸ்.என்.சுசான் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

இங்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே.சுகுணன் கருத்துத் தெரிவிக்கையில்;

கொரோனா தொற்று சந்தேக நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருபோருக்கே முதலில் இம்மருந்து வழங்கபட்டது. தற்போது கொரோனா தடுப்பு செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பிரதேச செயலக ஊழியர்களினதும் பொலிஸ் மற்றும் முப்படையினரதும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவர்களது பாவனைக்காக இம்மருந்து விநியோகிக்கப்படுகிறது.

14 மூலிகைகள் அடங்கிய மிகப்பெறுமதியான இந்த ஆயுர்வேத மருந்தானது பக்கவிளைவுகள் அற்றதும் பயன்மிக்கதுமாகும். இது எமது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் செயலிக்கச் செய்து விடக்கூடிய வல்லமையை கொண்டிருக்கிறது. பொதுவாக உடம்புக்கு நல்ல மருந்தாகும். கடந்த இரண்டு மாதங்களாக நானும் இம்மருந்தை பாவித்து வருகின்றேன் - என்று குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -