கொரோனாவிலிருந்து மக்களைப் பாதுகாப்பதில் இலங்கை அரசாங்கத்தின் முனெடுப்புக்கள் பாராட்டத்தக்கது.


தென்கிழக்குப் பல்கலைக் கழக அரசியல் துறைத் தலைவர் கலாநிதி எம்.எம்.பாஸில்.

பி.எம்.எம்.ஏ.காதர்-
லகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்ற கொரேனாவிலிருந்த மக்களைப் பாதுகாப்பதில் இலங்கை அரசாங்கத்தின் முன்னெடுப்பக்கள் பாராட்டத்தக்கவை இலங்கை அரசினுடைய திறமையான செயற்பாடுகளும்,பாதுகாப்புத் துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் போன்றவர்களின் அர்ப்பணிப்புக் காரணமாக எதிர்பார்க்கப்பட்ட விளைவுகளை விட குறைந்தளவான வகையில்தான் இலங்கை எதிர்நோக்கியிருக்கிறது என தெனகிழக்க்குப் பல்கலைக்கழக அரசியல் துறைத் தலைவர் கலாநிதி எம்.எம்.பாஸில் தெரிவித்தார்.

கொரோனாவில் இருந்து மக்களைப் பாதுகாபதற்கு அயராது பாடுபடும் பாதுகாப்புத் துறையினரதும், சுகாதாரப் பிரிவினரதும் சேவைகளைபப் பாராட்டி கௌரவிக்கும் தொனிப்பொருளிலான நிகழ்வும்,இப்தார் நிகழ்வும்,மருதமுனை பறக்கத் பிறைவட் லிமிட்டட் நிறுவனத்தின் எம்.ஐ.பப்ரிக் ஆடைகள் மொத்த விற்பனை நிலையத்தின் ஏற்பாட்டில் மருதமுனை பிரதான வீதியில் திங்கட்கிழமை(18-05-2020)நடைபெற்றது இங்கு விஷேட உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மருதமுனை பறகத் பிறைவட் லிமிடட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.ஐ.அப்துல் பரீட் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலாநிதி எம்.எம்.பாஸில் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்தாவது:- இன்றைய காலத்தின் தேவைக்கு ஏற்றவாறு மருதமுனை பறக்கத் பிறைவட் லிமிட்டட் நிறுவனத்தின் எம்.ஐ.பப்ரிக் ஆடைகள் மொத்த விற்பனை நிலையம் ஏற்பாடு செய்த கொரோனாவில் இருந்து மக்களைப் பாதுகாபதற்கு அயராது பாடுபடும் பாதுகாப்புத் துறையினரதும், சுகாதாரப் பிரிவினரதும் சேவைகளைப் பாராட்டி கௌரவிக்கும் தொனிப்பொருளிலான இன்றைய நிகழ்வு வரவேற்கத்தக்கதாகும்.

இந்த உலகமே தற்பொது வியந்து நிற்கக்கூடிய வகையில் உலக சனத்தொகையினையும் அரசியல் சமூக பொருளாதார சமூக மட்டத்தில் எல்லா அம்சங்களையும் பாதித்திருகக்கூடிய ஒன்றாகத் தான் இந்த கோவிட்19 என்று சொல்லக்கூடிய கொரோனா வைரஸ் காணப்படுகின்றது.
இந்த உலகத்தின் இராட்சத நிறுவனங்களாக மிகப்பெரும் பொருளாதார நிறுவனங்கள் வல்லரசுகளை எல்லாம் தலைகுனிய வைத்து உலகத்தின் பொருளாதாரத்தை முற்று முழுதாக பல வருடங்களுக்கு பின்தள்ளி பல பாதிப்புக்களை உலகமக்களுக்கும்,அரசியலுக்கும் ஏற்படுத்தியிருக்கின்ற சூழ்நிலையில்தான் நாம் இலங்கையில் தான் இலங்கையையும் அவதானிக்க வேண்டியிருக்கின்றது.

உலக வரைபடத்தில் சிறிய நாடாகக் காணப்படக்கூடிய இலங்கையில் இருபது அல்லது இருபத்தியிரண்டு மில்லியன் மக்களை அடிப்படையாகக் கொண்டு வாழக்கூடிய இந்த இலங்கையிலும் இந்த கொரோனா பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
கொரோனா தொற்றாளர்களாக இணங்காணப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலை இருக்கின்றபோது நாட்டின் ஒட்டு மொத்தப் பொருளாதாரமும் சமூகமும் பல பாதிப்புக்குட்பட்டிருக்கிறது.

இந்தத் தருணத்திலே இலங்கையில் ஏனைய சமூகங்கள் இந்தக் கொரோனாவினால் பாதிக்கப்பட்டதைவிட முஸ்லிம் சமூகம் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றது குறிவைக்கப்பட்டிருக்கின்றது நீண்ட காலமாக முஸ்லிம் சமூகம் கட்டியெழுப்பிவந்த நற்பெயரிலே சில பாதிப்புக்கள் உருவாகியிருக்கின்றது.

எனவே இந்தச் சந்தர்ப்பத்திலே நல்ல பல விடையங்களும் நிகழ்ந்து வருவதனையும் நாங்கள் காணக்கூடியதாக இருக்கின்றது.அந்த அடிப்படையிலே தொழில் என்றும்,வெளி ஊர்களிலும்,வெளி நாடுகளிலும் தொழில் புரிந்தவர்கள்; தங்கள் வீடுகளில் இருந்து கொண்டு தங்கள் கும்பத்தை வழிநடாத்துவதற்கும் இஸ்லாமிய அடிப்படையிலும்,தொழுகைகளை வீட்டில் ஜமாத்ஆக தொழுவதற்கும் இந்த நோன்;பு காலத்தில் சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கின்றது.

இதே போன்று பாதிக்கப்ட்ட மக்களுக்கு உதவிகள் செய்யக்கூடி நல்ல சந்தர்ப்பஙற்களும் ஏற்பட்டிருதாலும் இந்தப் பாதிப்பு முஸ்லிம் சமூகத்தைமிகவும் மோசமாக சூழ்ந்திருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.இப்படியான பாதிப்பக்களில் இருந்துவிடுட்டு முஸ்லிம் சமூகத்தினுடைய நற்பெயரை மீளக்கட்டியெழுப்புவதற்கு கங்கணம் கொண்டவர்களாக இந்தப் பெருநாளை மிகவும் எழிமையாகக் கொண்டாடவேண்டிய தேவைப்பாட்டுக்குள் தள்ளப்பட்டிருக்கின்றோம்.
அந்த அடிப்படையில் முஸ்லிம் சமூகம் இஸ்லாமிய விழுமியங்களின் அடிப்படையில் மிகவும் எளிமையாக பெருநாளைக் கொண்டாடி எங்களோடு வாழுகின்ற ஏனைய சமூகத்திற்கு முன்மாதிரியாகக் திகழவேண்டும்; என அவர் மேலும் தெரிவித்தார்;.
கல்முனைப் பிராந்தியத்தில் கொரோனாவில் இருந்து மக்களைப் பாதுகாபதற்கு அயராது பாடுபடும் பாதுகாப்புத் துறையினரதும்,சுகாதாரப் பிரிவினரதும் சேவைகளைப் பாராட்டி 160 பேருக்கு அன்பளிப்புக்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இங்கு அஷ்ஷெய்க் என்.ஜி.அப்துல் கமால் றமளான் சிந்தனை நிகழ்த்தினார்,கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.றிஸ்வின் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உள்ளீட்ட பலர்கலந்த கொண்டனர் நிகழ்வுகளை பிறை எப்.எம். கட்டுப்பாட்டாளர் பஷீர் அப்துல் கையூம் தொகுத்து வழங்கினார்.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -