தலை நகர் கொழும்பு தொடர் ஊரடங்குச் சட்டத்தினால் சுமார் 52 நாட்கள் முடக்கப்பட்ட நிலையில் நேற்று 11ஆம் திகதி முதல் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையிலும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களை பகுதி பகுதியாக இயங்க வைக்கும் வகையில் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்த துறைகளுக்கு ஊழியர்கள் வரும் வகையில் அரச பேரூந்து மற்றும் புகையிர சேவைகளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவையில் ஈடுபடுத்தி அரச இயந்திரங்களை இயங்க வைத்துள்ளது.
இவ்வாறான நிலையில் தலை நகர் கொழும்பில் நேற்றைய தினத்தைவிட இன்று அதிகமான அரச தனியார் ஊழியர்கள் கடமைக்கு சென்றதையும் வெறிச்சோடிக் கிடந்த கொழும்பு இன்று ஓரளவு மக்கள் நடமாட்டம் இடம் பெறுவதையும்.
புறக்கோட்டை பிரதான வீதியுட்பட அதிகமான பகுதிகளில் வர்த்தக நிலையங்கள், வங்கிகள், மருந்தகங்கள் திறந்துள்ளதையும் காணக் கூடியதாகவுள்ளதுடன் அரச பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளதையும், மத்திய தபால் திணைக்களத்தில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை காண முடிந்ததுடன், மெனிங் பொதுச் சந்தையில் மரக்கறி வகைள் வந்து குவிந்துள்ள போதிலும் சிறு வியாபாரிகள் குறைவாக வந்துள்ளதையும் பெருமளவான மரக்கறி வகைகள் விற்பனை செய் முடியாத நிலையில் அவை பழுதடைந்து வீசப்பட்டுள்ளதையும் காண முடிந்தது.
இந்நிலைமகள் காரணமாக பெருமளவான வியாபாரிகள் நஸ்டத்தை எதிர் நோக்கியுள்ளதாகவும் வர்த்தகர்கள் கவலை தெரிவித்தனர்.