தொண்டமானின் மறைவால் மலையகமெங்கும் சோகமயம் சந்திகள் தோரும் பந்தல் அமைத்து உருவப்படம் வைத்து பொதுமக்கள் அஞ்சலி.


ஹட்டன் கே.சுந்;தரலிங்கம்-
தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சரும் மலையகத்தின் தன்னிகரற்ற தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் மறைவையொட்டி மலையகம் முழுவதும் சோகமயமாகியுள்ளன.
நகரங்களிலும் வீடுகளிலும் வெள்ளைக்கொடிகள் பறக்கவிட்டவாறு சந்திகள் தோரும் பந்தல்கள் அமைத்து தொண்டமானின் உருவப்படத்தினை வைத்து விளக்கேற்றி மலர்வைத்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நகரங்களில் ஆங்காங்கே தொண்டமானின் கண்ணீர் அஞ்சலிப்பதாதைகள் தொங்கவிடப்பட்டுள்ளதுடன் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாது தங்களுடைய துயரத்தினை தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நேற்று அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சுயவீனமுற்று தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அவர் உயிரிழந்த செய்தி எல்லோர் மத்தியிலும் காட்டுத்தீ போல் பரவியது என பலரை வியப்பிலும் தாலாத சோகத்திலும் ஆழ்த்தியது. இந்நிலையில் பெருந்திரளான அரசியல் தலைவர்கள் தொழிற்சங்கவாதிகள் வைத்தியசாலையின் முன் குவிந்தனர்.
இன்றைய தினம் (27) மலையகத்தின் தோட்டத்தொழிலாளர்கள் உட்பட பலர் தொண்டமான் இறப்பினை முன்னிட்டு பலவிதமான அஞ்சலி நிகழ்வுகளை ஒழுங்குசெய்துள்ளனர். இந்நிலையில் மலையகம் முழுவதும் வெள்ளைக்கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து இளைஞர்கள் கருத்து தெரிவிக்கையில் மலையகத்தில் அஞ்சாநெஞ்சம் படைத்த தலைவராக திகழ்ந்தவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான.; அவர்கள் அவருடைய மறைவானது மலையக மக்களுக்கு மாத்திரம் அன்றி மலையக இளைஞர்களுக்கும் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரின் துணிச்சலான முடிவுகள் காரணமாக பல்வேறு மாற்றங்கள் மலையகப்பகுதியில் நிகழ்ந்துள்ளன. அத்தோடு இன்று இவ்வாறு ஒரு மாற்றம் ஏற்படுவதற்கு அடித்தளமாக அமைந்தவர் ஆறுமுகன் தொண்டமான் என தெரிவித்தனர்.
இது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில் தொழிற்சங்க ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அச்சமின்றி முடிவுகளை எடுக்கும் தலைவர் என்றால் அது ஆறுமுகன் தொண்டமான் தான் அவரது இழப்பு மலையகத்துக்கு மாத்திரமன்றி முழு நாட்டிக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரைப் போன்ற தலைவர் ஒருவர் மீண்டும் பிறப்பாரா? என்பது கூட எமக்கு சந்தேகம் தான் என தெரிவித்த அவர்கள் தொண்டமானின் இறப்பு குறித்து ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -