கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீயூ லைவ் பௌன்டேசன் அமைப்பு உதவி


பாறுக் ஷிஹான்-
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த கல்முனை பிராந்திய மக்களிற்கு நீயூ லைவ் பௌன்டேசன் அமைப்பு உலருணவு வழங்கி வைத்துள்ளது.
புதன்கிழமை(6) முற்பகல் குறித்த பொருட்கள் யாவும் கர்ப்பிணி தாய்மார்கள் தின கூலி சிங்கள குடும்பங்கள் என கல்முனை பெரியநீலாவணைஇசேனைக்குடியிருப்பு இபாண்டிருப்பு இ நற்பிட்டிமுனைஇ மணற்சேனை இ துரைவந்திய மேடு இபோன்ற பிரதேசத்தில் உள்ள தமிழ் சிங்கள குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ. சுகுணன் சுகாதார வைத்திய அதிகாரி ஆர். கணேஸ்வரன் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் கல்முனை பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல்.சம்ஷுதீன் ஆகியோரால் இப்பொருட்கள் வழங்கி வைத்தனர்.
விசேடமாக கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலை சுகாதார பிரிவின் மருத்துவ மாது பிரிவில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -