கொரோனாவால் உலக நாடுகள் பலவீனமடைந்ததை பயன்படுத்தி தென்சீனக் கடலை ஆக்கிரமிக்க சீனா முயற்சி!


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
கொரோனா வைரஸால் உலகமே ஸ்தம்பித்து உள்ளது. இச் சூழலை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தென்சீனக் கடலை ஆக்கிரமிக்க சீனா முயற்சிக்கிறது. பசுபிக் பெருங்கடலின் ஒரு பகுதியான தென் சீனக்கடல் வழியாகதான் உலக கடல் போக்குவரத்தின் மூன்றில் ஒரு பங்கு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

$3 Trillion ( சுமார் 580 லட்சம் கோடி ரூபா ) மதிப்புள்ள வர்த்தக பொருட்கள் இந்த கடல் வழியாக வருடம் தோறும் கொண்டு செல்லப்படுகின்றன. மேலும் தென்சீனக் கடலுக்கு அடியில் எண்ணெய், இயற்கை எரிவாயு, உள்ளிட்டவை அதிகளவில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தென்சீனக் கடல் பகுதிக்கு சீனா பல வருடமாக சொந்தம் கொண்டாடி வருகிறது. அதே போல் அந்த கடல் பகுதியிலுள்ள தீவுகளுக்கு இந்தோனேசியா, வியட்னாம், மலேசியா, கம்போடியா, தாய்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளும் உரிமை கோரி வருகின்றன. இந்த சூழலில் கொரோனா வைரஸின் பக்கம் உலக நாடுகள் திரும்பி இருப்பதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தென்சீனக் கடலை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் சீன அரசு ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சீனாவின் அத்துமீறல்கள் குறித்து மார்ச் மாத இறுதியில் ஐ.நாவிடம் வியட்னாம் முறைப்பாடளித்தது.

முறைப்பாடளித்த தெரிவித்த சில நாட்களில் (April மாதம் 2ம் திகதி ) வியட்னாமை சேர்ந்த மீன்பிடி படகொன்றை சீன ரோந்து கப்பல் மோதி மூழ்கடித்தது. இது குறித்து விளக்கமளித்த சீன அரசாங்கம் தங்களுக்கு சொந்தமான கடல்பகுதியில் வியட்னாம் படகு அத்துமீறி நுழைந்ததாகவும், தங்கள் கப்பல் மீது மோதும் வகையில் வந்ததால் அந்த படகை மூழ்கடித்ததாகவும் தெரிவித்தது. 

அதனை தொடர்ந்து April மாதம் 11ம் திகதி தாய்வானுக்கு சில மைல் கடல் தொலைவில் சீன போர் விமானங்கள் பயிற்சி மேற்கொண்டன. மேலும் தென்சீன கடல் பகுதியில் அமைந்துள்ள 25 தீவுகள், கடல் திட்டுக்கள் உள்ளிட்டவற்றுக்கு கடந்த மாதம் சீன மொழியில் பெயரும் சூட்டியது சீன அரசாங்கம்.

தென்சீன கடல் பகுதியை போலவே கிழக்கு சீன கடல் பகுதியையும், ஆக்கிரமிக்க சீனா திட்டம் தீட்டியது. அதன் வெளிப்பாடாக அங்குள்ள தீவு பகுதிக்கும் தனது கப்பலை அனுப்பி வைத்தது. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்தது.

இதுமட்டுமல்லாமல் தென்சீன கடல் விவகாரத்தில் மலேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளை சீண்டும் வகையிலும் சீனா அரசாங்கம் செயல்பட்டது. சீனாவின் அத்துமீறல்கள் அதிகரிக்க தொடங்கியதால் சீனாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தென்சீன கடல் பகுதிக்குள் கடந்த மாதம் தனது போர் கப்பல்களை கொண்டு வந்து நிறுத்தியது அமெரிக்கா. துணைக்கு அவுஸ்திரேலிய போர்க்கப்பலும் வந்ததால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டது. இருப்பினும் அமெரிக்காவின் போர் கப்பல்களை விரட்டி அடித்து விட்டதாக சீனா தெரிவித்தது.

தென்சீனக் கடலில் சீனாவின் அத்துமீறல்கள் தற்போதும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. கொரோனா வைரஸின் பாதிப்பால் பல நாடுகள் பலவீனம் அடைந்துள்ள நிலையில் சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -