தம்புள்ளை பொது கழிப்பறைக்கு அருகில் மயக்கமுற்ற நிலையில் காணப்பட்ட இராணுவ வீரர் ஒருவர், தம்புள்ளை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்துள்ளதாக தம்புள்ளை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தம்புள்ளை பிரதான பஸ் தரிப்பிடத்திலுள்ள பொது கழிப்பறைக்கு முன்னால், சாதாரண ஆடை அணிந்திருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் திடீரென மயக்கமுற்று வீழ்ந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் இருந்தவர்கள் கொரோனா அச்சம் காரணமாக, அவருக்கு உதவாத நிலையில், சுமார் 30 நிமிடங்களின் பின்னர் மூவர் இணைந்து அவரை முச்சக்கர வண்டியொன்றில் ஏற்றி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஆயினும் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கும் முன்னரே மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இராணுவ சிப்பாயின் மரணத்திற்கான காரணம் இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதோடு, தம்புள்ளை பொலிசார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.தினகரன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -