லுணுகலை சுவிங்ரன்தோட்ட மக்களுக்கு காரைதீவிலிருந்து நிவாரணசேவை.


காரைதீவு சகா-
லையகத்தின் பதுளை மாவட்டத்தின் பசறைப்பிரிவிலுள்ள லுணுகல கிராமத்தின் சுவிங்ரன் தோட்டத்தில் வாழும் மிகவும் பின்தங்கியள தோட்டப்புற மக்களுக்கு 100 பொதிகள் நேற்று வழங்கிவைக்கப்பட்டன.

வசீகரன் சமுக அறக்கட்டளை நிதியத்தின் அனுசரணையுடன் அந்நிதியத்தின் பணிப்பாளரும் அம்பாறை மாவட்ட சமுகசெயற்பாட்டாளருமான தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் சென்ற கொவிட்கெத்து அணியினர் அந்த மக்களைச்சந்தித்து இப்பொதிகளை வழங்கினர்.
லுணுகலை வாழ் வசிகரன் நிதிய இணைப்பாளர் சமுகசெயற்பாட்டளர் திருமி எஸ்.நிசா விடுத்த வேண்டுகோளின்பேரில் இவ்வுதவிகள் அங்கு 100குடும்பங்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
அருகிலுள்ள சுவிங்ரன் கிதிரேசன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ கமலேந்திரக்குருக்களும் கலந்துகொண்டு பொதிகளை வழங்கிவைத்தார்.

லுணுகல தோட்ட பிரதிநிதி க.தனுசியன் குழுவினரை வரவேற்க சமுகசெயற்பாட்டாளர் வி.ரி.சகாதேவராஜா தவிசாளர் கே.ஜெயசிறில் ஆகியோர் கொரோனா தடுப்புசெயற்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வு விளக்கங்களையும் மலையகப்பாய்ச்சலுக்கான காரணத்தையும் தெளிவுபடுத்தி உரையாற்றினர்.
சுனாமி கிழக்கைத்தாக்கியபோது மலையகத்திலிருந்து எச்டிஓ என்கின்ற மனிதஅபிவிருத்திதாபனம் காரைதீவுக்கு வந்து முழு வடக்கு கிழக்கிற்கும் அருஞ்சேவையாற்றியது. அன்று அவர்கள் மலையகத்திற்கும் கிழக்கிற்கும் அமைத்த பாலம் இன்று பிரதியீடான கிழக்கிலிருந்து மலையகத்திற்கு அமையப்பெற்றிருக்கிறது. எச்டிஓ பணிப்பாளர் பி.பி.சிவப்பிரகாசம் இணைப்பாளர் பி.ஸ்ரீகாந்த் ஆகியோர் பாராட்டக்குரியவர்கள் என சமுகசெயற்பாட்டாளர் வி.ரி.சகாதேவராஜா உரையாற்றுகையில் குறிப்பிட்டார். தவிசாளர் கே.ஜெயசிறிலும் அதனைத்தொட்டு உரையாற்றினார். அன்று 2008ஆம் ஆண்டு தொடஙகிய அவர்களது கிழக்கிற்கான சேவை இன்றும் தொடர்கிறது.பாராட்டுகள் என்றார்.

இறுதியில் தோட்டமக்கள் அங்குள்ள சமகால நிலைவரம் தொடர்பில் உரையாற்றினர்.மக்கள் இருகரம் கூப்பி நன்றி கூறிய அதேவேளை இதுவரையும் யாரும் தம்மைக்கவனிக்கவில்லையென அழாக்குறையாக வேதனையுடன் கூறினர்.
இதற்கு ஜேர்மனில்வாழும் மகான் கோடீஸ்வரனின் வசீகரன்அறக்கட்டளை நிதியம் நிதியுதவியை வழங்கியிருந்தது. கிழக்கில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் கடந்த 60நாட்களாக மனிதநேய உலருணவு நிவாரணங்களில் ஈடுபட்டுவந்த 'கொவிட்கெத்து' அணியினரின் பார்வை நேற்று இரண்டாவது தடவையாக மலையகத்திற்கும் விஸ்தரிக்கப்பட்டதமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -