சங்கங்களும் அமைப்புக்களும் நினைத்தால் சமூகவளர்ச்சிக்கு உருதுணையாகலாம் என்பது கொட்டகலை வர்த்தக சங்கம் சிறந்த எடுத்துக்காட்டாகும்.


ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
மது நாட்டில் பல்வேறு தேவைகளுக்காக ஆளுக்கு ஒரு சங்கம் அமைக்கப்பட்டுள்ளன.அது மாத்திரமன்றி வௌ;வேறு தேவைகளுக்காக பல அமைப்புக்களும் உருவாக்கப்பட்டுள்ளன.இந்த சங்கங்களினதும் அமைப்புக்களினதும் உருவாக்கும் போது சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் அல்லது அதில் உருவாக்குவதற்கான காரணங்கள் நிறைவேறியிருந்தால் இன்று இந்த சமூகம் பாரிய அளவில் சொல்லில் அடங்காத அளவிற்கு வளர்ச்சி கண்டிருக்க வேண்டும்.
மலையகத்தினை பொருத்தவரையில் இன்று வௌ;வேறு தேவைகளுக்காக பல சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.தொழிலாளர்களின் உரிமைக்காக பல சங்கங்கள்,ஆசிரியர்கள் அரச உத்தியோகஸ்த்தர்கள்,தனியார் துறையினர் என பல்வேறு சங்கங்கள் எம்மத்தியில் காணப்படுகின்றன.குறிப்பாக சங்கமில்லாத துறையோ,சங்கமில்லாத தொழிலோ இல்லாத அளவுக்கு சங்கங்கள் அமைப்புக்கள் உருவாகியுள்ளன.
இந்த சங்கங்களினதும் அமைப்புக்களினதும் குறிக்கோள்கள் அல்லது உருவாக்கும் போது கூறப்பட்ட விடயங்கள் நிறைவேறியிருந்தால் இன்று இந்த சமூகம் உலகிலேயே மிக பெரிய சமூகமாக மிளிந்திருக்கும் ஆனால் அதிகமான சங்கங்களும் அமைப்புக்களும் தங்களுடைய சுய நலத்திற்காகவே உருவாக்கப்பட்டுள்ளன என்பது தான் உண்மை.இதன் காரணமாக தான் இன்று எந்த ஒரு பிரச்சினையினையும் தீர்க்கப்படாத நிலையில் உள்ளன.
இது மாத்திரமா ஜாதிக்கு பல சங்கம் மதத்திற்கு பல சங்கம்,தொழில் வர்க்கத்திற்கு பல சங்கம் என எல்லாத்துக்குமே சங்கங்கள் உருவாக்கி சமூகத்தை கூறுபோட்டுள்ளன.
இவ்வாறு உருவாக்கப்பட்ட எந்த சங்கமும் தனது முழுமையான பங்களிப்பினை செய்து தங்களது அங்கத்தவர்களின் பொது மக்களின் பிரச்சினைகளை முழுமையாக தீர்த்து வைத்துள்ளது என்பது தான் இன்றுள்ள கேள்வி?
எது எவ்வாறான போதிலும் சங்கங்கள் அமைப்புக்கள் தங்களுடைய அங்கத்தவர்களின் நலனில் மாத்திரம் அக்கரை கொள்ளாது தன்னைச் சார்ந்த சமூத்திற்காகவும் உழகை;க வேண்டும் என்பதனை எமது நாட்டுக்குள் ஏற்பட்ட இரண்டு விடயங்கள் எமக்கு சுட்டிக்காட்டுகின்றன.ஒன்று சுனாமி அனர்த்தம்,மற்றது கொவிட் 19 தாக்கம் போன்றன எம்மை மீண்டும் மீண்:டும் சிந்திக்க வைத்துள்ளன.இவ்வாறான ஒரு சூழ் நிலையில் கொட்டகலை வர்த்தக சங்கத்தின் செயப்பாடுகள் குறித்து இவ்விடத்தில் சுட்டிக்காட்டுவது மிக பொருத்தமானது.
கொட்டகலை பகுதியில் கடந்த மூன்று மாத காலமாக சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை.இது தொடர்பாக பல முறைபாடுகளை பொது மக்களால் நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகால் அமைப்பு சபைக்கு முன்வைக்கப்பட்ட போதிலும் அதனால் அவர்களுக்கு தீர்;வு கிடைக்காமையினால் வர்த்தக சங்கத்திடம் தெரிவித்துள்ளனர். இதனை கையில் எடுத்த வர்த்தக சங்கம் குறித்த அதிகாரிகளிடம் பல கலந்துiராயடியுள்ளதுடன் அதற்கு தீர் பெற்றுக்கொடுக்க அந்த சங்கம் முழு மூச்சாக உழைத்துள்ளது.ஆகவே இந்த சங்க உறுப்பினர் இப்பிரச்சினைக்கான அடிப்படை விடயங்களை ஆராய்ந்து அதனை ஊடகங்கள் மூலமாகவும் எழுத்து மூலமாகவும் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்..இதன் பயனாக நேற்று (14) திகதி நீர் வடிகால் அமைப்பின் உயர் அதிகாரிகளான பொது முகாமையாளர்கள் பொறியியலாளர்கள் குறித்த இடத்திற்கு வருகை தந்து பிரச்சினைக்கு ஏதுவான காரணங்களை இனங்கண்டு தீர்வுகளை பெற்றுக்கொடுத்துள்ளனர்.
குறிப்பாக நன்னீர் மீன் வளர்ப்பு கிடங்குகளிலிருந்து அசுத்தமான நீரை இதற்கு காரணம் என கண்டு பிடிக்கப்பட்டு அதனை உரிய முறையில் முன்னெடுக்கும் வரை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு உரிய நிறுவனங்களுடன் கலந்துரையாடி தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ன.
இதில் ஒரு விடயத்தினை மாத்திரம் சுட்டிக்காட்டுவது மிகவும் பொருத்தமாகும். எந்த ஒரு திட்டத்தினை முன்னெடுப்பதற்கு முன் சரியான வழிமுறைகளை பினபற்றி நன்கு ஆராய்ந்து திட்டமிட்டிருந்தால் எவரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பதனை மிகப் பொருத்தமானதாகும்.

இதனால் எதிர்காலத்தில் கொட்டகலை பிரதேச மக்களுக்கு சுத்தமான குடிநீர் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளன.அது மாத்திரமல்லாது கடந்த காலங்களில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கொட்டகலை நகரில் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக சமூக ஊடகங்களில் தெரிய வந்ததனை அடுத்து பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நியாயமான விலையில் பொருட்களை பெற்றுக்கொடுக்க வேண்டும.; என்ற நல்லெண்ணத்துடன் மாவட்ட செயலாளரை சந்தித்து தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முயற்சி செய்தது.இதனை உணர்ந்த மாவட்ட செயலாயர் இதனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து குறித்த சங்கத்தின் தலைவர் புஸ்பா விஸ்வநாதன் கருத்து தெரிவிக்கையில்.. கடந்த மூன்று மாத காலமாக கொட்டகலை பிரதேசத்திற்கு சுத்தமான குடிநீர் பெற்றுக்கொடுக்கப்படவில்லை. என்று பலர் எமது சங்கத்திடம் முறைபாடுகளை முன்வைத்தார்கள்.அதனை நாங்கள் கருத்தில் கொண்டு நாங்கள் பல தடவைகள் குறித்த நீர் பெற்றுக்கொடுக்கப்படும் பிரதேசங்களுக்கு சென்று அதனை தேடிப்பார்த்தோம் அப்போது எங்களுக்கு பல விடயங்கள் தெளிவானது ஒன்று நன்னீர் மீன் வளர்ப்பு பகுதியில் மீன்களுக்கு உணவாக மாமிசங்கள் போடப்படுவதனாலும். அந்த களங்க நீரினை குடிநீருடன் கலப்பதனாலும் குடிநீர் துர்நாற்றத்துடன் களங்கி வருவது புலனானது.அது மாத்திமின்றி குறித்த பகுதியில் சட்டவிரோதமாக மண் அகழப்படுவதும்,குளிப்பதும் காரணமாக இருந்தன. எனவே இது குறித்து நாங்கள் சங்கமென்ற ரீதியில் உரிய அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் அறிவித்தோம.; அதனை தொடர்ந்து நீர்வடிகால் அமைப்பின் உயரதிகாரிகள் பொறியியலாளகளுடன் வருகை தந்து ஆராய்ந்து இந்த பிரச்சினை முழுமையான தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை எடுத்தள்ளனர்.இது குறித்து அந்த அதிகாரிகளுக்கும் இந்த பிரச்சினையினை உலகறிய செய்த ஊடகங்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். என அவர் தெரிவித்தார்.
இது குறித்து பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில் கடந்த மூன்று மாத காலமாக எங்களுக்கு குடிநீர் வழங்கிய நீர்வடிகால் அமைப்பு சபையினால் பெற்றுக்கொடுக்கப்பட்ட குடிநீர் குடிக்க முடியாத நிலையிலேயே இருந்தது.நாங்கள் இது குறித்து பல தடவைகள் முறைபாடுகள் செய்தோம் ஆனால் அவர்கள் கருத்தில் கொண்டதாக தெரிவில்லை. இந்நிலையில் நாங்கள் வர்த்தக சங்த்திடம் எமது பிரச்சினைகளை தெரிவித்தோம். அவர்கள் இது குறித்து உடனடியாக செய்பட்டதனை ஊடகங்கள் ஊடாகவும் நேரடியாகவும் நாங்கள் அறிந்து கொண்டோம். இன்று அவர்களின் முயற்சியின் காரணமாக எங்களுக்கு சுத்தமான நீர் வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள் அதற்காகு அவர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றிகளை தெரிவிக்கிறோம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
எது எவ்வாறான போதிலும் தொழிற்சங்கங்கள்.அபிவிருத்தி சங்கங்கள்,சமூக அமைப்புக்கள்,என அத்தனை சமூக சார்ந்த அமைப்புக்களும் தங்களது பொறுப்பினை நூற்றுக்கு நூறு வீதம் நிறைவேற்ற முடியாவிட்டாலும் ஐம்பது சதவீதம் நிறைவேற்றினாலும் இந்த சமூகம் பாரிய வளர்ச்சி கண்டிருக்கும் என்பது தான் மறுக்க முடியாது உண்மையாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -