எதிர்கட்சிகள் தேர்தலை ஒத்திவைக்க சொல்வது பற்றோலோ ஆதங்கத்தாலோ அல்ல.



ஹட்டன் கே.சுந்தரலிங்கம்- 
நாட்டிலே ஒரு பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. இப்பொழுது தொற்று நிலமை காரணமாக தேர்தல் ஒத்திவைக்கபட்டு இருக்கின்றது.எங்களைப் பொறுத்த வரையில் நாடு நோய்வாய்ப்பட்டு இருக்கின்ற சந்தர்ப்பத்தில் தேர்தல் சம்பந்தமாக யோசிக்க வேண்டியநிலைமை இருக்கின்ற அதேசந்தர்ப்பத்தில்;. இங்கு இருக்கின்ற எதிர்க்கட்சிகள் மக்கள் மீதுள்ள பற்றாலோ மக்கள் நோயினால் பீடிக்கப்பட்டு விடுவார்கள் என்ற ஆதங்கத்தில் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று சொல்லவில்லை.

 அவர்கள் இன்று தேர்தலுக்கு போனால் நிச்சயமாக படுதோல்வியடைந்து விடுவார்கள் என்ற பயம். தேர்தலை ஒத்திவைப்பதே அவர்களின் நோக்கம் என முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கணகராஜ் தெரிவித்தார.

இன்று (03) ஹட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்நது கருத்து தெரிவிக்கையில்..
பிரதேச சபைத்தேர்தலை எடுத்து பாருங்கள் ஒத்திவைத்தார்கள் மாகாண சபைத்தேர்தலைப்பாருங்கள் எதோவொரு காரணத்திற்காக இல்லாமலே செய்துவிட்டார்கள்.

இப்பொழுது பொதுத்தேர்தலும் தள்ளிவைக்கப்பட்டால் தோல்விகள் தள்ளிவைக்கப்படுவதாக அவர்கள் நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

 ஆனால் எப்பொழுது தேர்தல் வைக்கப்பட்டாலும் இந்த எதிர்க்கட்சிகள் தோல்வியடைவது உண்மை மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லை ஆறில் ஐந்து பங்கு பெரும்பான்மையுடன் இப்போதைய ஜனாதிபதியினுடைய கட்சி வெற்றிபெறப்போவது உறுதி.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு தேர்தல் சம்பந்தமாக நீதிமன்றம் செல்வதாக கூறுவது வியப்புக்குரிய விடயம். நாட்டிலேயே 70 வருடங்களாக இனப்பிரச்சினை துறையோடிப்போய் இருக்கின்றது. கடந்த நான்கரை வருட நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற ஆட்சியின் போது அவர்கள் நாட்டின் யாப்பை மாற்றுகின்ற வல்லமை பெற்றிருந்தும் அதனால் அவர்கள் செய்யமுடியவில்லை.

பாராளுமன்ற தேர்தலை ஒத்திவைப்பது அல்லது கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை கூட்டுவது சம்பந்தமாக இவர்கள் முனைப்பு காட்டுவதாக இருந்தால் இவர்கள் தமிழ் மக்களை கேள்விக்குறியாக்குகின்ற நிலைமையை தோற்றுவிக்கும்.

 தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையிலேயே அவர்களும் தோல்விப்பாதையில் சென்றுகொண்டிருக்கிறார்கள்.

அங்கே அவர்களுக்கு எதிரான சக்திகள் வலுப்பெற்றுக்கொண்டு இருக்கின்றன.

ஆகவே அவர்களும் இதைக்காட்டி தோல்வியினைத்தள்ளி வைத்து விடலாமா என்ற எண்ணத்தில் செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். எது எவ்வாறாக இருந்தாலும் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற ஆட்சியில் சரியாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள்.

இவர்கள் மனப்பால் குடிப்பது போல பழைய பாராளுமன்றம் கூடாது புதிய பாராளுமன்றம் கூடும் அதில் எல்லா முடிவுகளும் எடுக்கப்படும்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் வேலை செய்தவர்கள் வீடுகளுக்கு அனுப்பபட்ட சந்தர்ப்பத்திலேயே மலையகத்தில் இருந்து கொழும்பில் வேலை செய்தவர்கள் அவரவர் பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

அவர்கள் ஒரு அடைக்கப்பட்ட சூழ்நிலையில் எவ்வித வசதிகளும் இல்லாமல் இருந்தபோது அவர்கள் மாற்று வழிகளைப்பயன்படுத்தி மலையகத்திற்கு வர எத்தணிப்பது இயற்கையான விடயம்.

எங்களைப் பொறுத்தவரையில் அமைச்சரவை தீர்மானம் எடுத்த உடனேயே அந்த இளைஞர்களை மலையகத்திற்கு கொண்டு வந்து பாதுகாப்பான முறையில் தனிமைப்படுத்தி அவர்களை சமூகத்திற்கு சேர்;த்திருக்க வேண்டும்.

அவ்வாறு பொலிஸாரும் சுகாதாரத்துறையினரும் செய்யாததன் காரணமாக பலர் மாற்றுவழிகளில் மலையகத்துக்கு வர எத்தனித்ததும் வந்ததும் உண்மை. காவல்துறையினர் தங்களின் கையாளாகத்தனத்தையும் சுகாதாரதுறையினர் தாங்கள் நடவடிக்கைளை எடுக்காததன் காரணமாகவும் இப்போது இதை மூடி மறைப்பதற்காக வதந்தி எனக்கூறுகின்றனர்.

எங்களுடைய மலையக இளைஞர்கள் மலையகத்திற்கு கொண்டுவரப்படவேண்டும் அதுவும் நோய்த்தொற்று பரிசோதனை செய்து அவர்கள் சமூகத்திலே கலக்கப்பட வேண்டும் என்பது தான் எமது நோக்கம். தற்போதைய கொரோனா தொற்று காரணமாக தொழிலிழந்து நிர்க்கதியான குடும்பங்களுக்கு கௌரவ ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச 5000 ரூபா வழங்கும் நடவடிக்கையொன்றை முன்னெடுத்திருந்தார்.

இது மலையகம் உட்பட அனைத்து பகுதிகளுக்கும் வழங்கப்பட்டது. சிலர் சொல்லுகின்றனர் மலையகத்திற்கு வந்து கிடைக்கவில்லை என்ற தோரணையிலேயே எதிர்க்கட்சி புராணத்தை பாடுவது எங்களுக்கு கேட்கக்கூடியதாக இருக்கின்றது.

நான் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசத்திலே இரண்டு சமூர்த்தி வங்கிகள் இருக்கின்றன.அதில் நோர்வூட் சமூர்த்தி வங்கிப்பிரிவில் 23 ஆயிரத்து 31 பேருக்கும் அட்டன் சமூர்த்தி வங்கி ஊடாக 13 ஆயிரத்து 689 பேருக்கும் நிவாரணங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஒரு சிலருக்கு கிடைக்காத சூழல் இருக்கின்றது அது சம்பந்தமாக அரசாங்க உயர்மட்டத்தோடு நடத்திய கலந்துரையாடலில் தகுதியிருந்தும் எவருக்கும் இந்நிவாரணம் கிடைக்காது இருந்தால் அந்தப்பட்டியலை தருமாறு கேட்டிருக்கிறார்கள்.

அந்தப்பட்டியலை தயாரித்து வழங்கும் பணிகளிலும் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.

பொதுவாக இந்த இரண்டு சமூர்த்தி வங்கிகளையும் சார்ந்த பிரதேசம் தோட்டத்தொழிலாளர்களும் மலையக மக்களும் வாழுகின்ற பிரதேசம்.அப்படியென்றால் இப்பெருந்தொகையான பணம் யாருக்கு போனதென்ற கேள்வி எழுகின்றது இந்த கூற்று முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ளக் கூடிய கூற்றல்ல.

மலையகத்திலே இருக்கின்ற தொழிலிழந்து இருக்கின்ற வறுமையில் இருக்கின்ற பல்லாயிரம் பேருக்கு அதாவது நோர்வுட் சமூர்த்தி வங்கியின் ஊடாக அண்ணளவாக 23000 பேருக்கும் அட்டன் சமூர்த்தி வங்கியின் ஊடாக 13 000 பேருக்கும் இந்த நிவாரணம் போய் கிடைத்திருக்கின்றது.இதே போல ஏனைய பிரதேசங்களுக்கும் கிடைத்திருக்கின்றது.எதிர்க்கட்சி அரசியல் செய்யவேண்டுமானால் ஏதாவது காரணங்களை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.

எங்களுடைய ஜனாதிபதி தலைமையிலுள்ள அரசாங்கம் வறுமையிலுள்ள மக்களுக்கு இவ்வளவு பெருந்தொகை பணத்தை ஒதுக்கியிருக்கின்றது. ஆனால் கடந்த அரசாங்கத்தில் 50 ரூபாவும் கொடுக்க முடியவில்லை கடனாக 5000 ரூபாவும் கொடுக்கமுடியவில்லை இவர்கள் தான் இன்று இந்த நிவாரணம் கேள்வியெழுப்பிக்கொண்டு இருக்கின்றார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -