சிவில் சமூக மட்டத்திலிருந்தும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்போம்.!



ஒரு இலட்சம் கையொப்பம் பெறல் -
—-----------------------------------------------------

தூக்கம் தொலைந்து நீண்ட நாட்களாயிற்று
படுக்கை முழுவதும் நெருப்பு எரிகிறது
எரிக்கப்பட்டவர்கள் ஒரு தரம்தான் எரிந்தார்கள்
நாம் ஒவ்வொரு நாளும் எரிந்து கொண்டிருக்கிறோம்
மனதின் எரிவை எது கொண்டும் ஆற்றிட முடியாது
தீக்காயங்களுடன் உணர்வுகள் பதறுகின்றன
உள்ளங்கள் சாம்பலாகி சிதறிக்கிடக்கின்றன
அதன் மீது நின்று வாழ பிடிக்கவில்லை
இயங்குதல் இல்லாத பாத்திரம் மிகக்கொடுமையானது
உள்ளுக்குள் உறுத்திக்கொண்டே இருக்கிறது
ஜடமாய் கிடப்பதில் உடன்பாடு இல்லை
எங்கிருந்தாவது தொடங்க வேண்டும்
எதுவென்று மூளையை கசக்கியும் விடைகள் தூரமாயேவுள்ளன
சும்மா குந்தியிருந்து எதுவும் நடக்காது
களம் குதிப்பதை தவிர வேறு வழியே இல்லை
சமூக மட்டத்திலிருந்தும் அழுத்தம் வேண்டும்
அது அடிமனதையும் தொட வேண்டும்
இப்படிச் செய்தால் என்ன என்று பல யோசனைகள்
சிலதை கழித்த பின் ஒன்றிரண்டே சாத்தியமாய் தெரிந்தது
அப்படி ஒன்றுதான் இது
இது சமூக ஒற்றுமைக்கு ஒரு வழி
ஒரே குரலில் பேச நல்ல மொழி

ஆம்.......
கோவிட் - 19 யினாலோ அல்லது அதனால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தினாலோ - மரணமடையும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரியூட்டாமல் நல்லடக்கம் செய்யுமாறு கோரி - அழுத்தம் கொடுப்பதற்காக - அம்பாரை மாவட்டத்தில் ஒரு இலட்சம் கையொப்பத்தினை பெற்று - அரசிற்கு கையளிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது சமூகத்தில் இருக்கும் எல்லா தரப்பினரதும் கருத்து வேறுபாடுகளை களைந்து - அரசியல் பேதங்களை மறந்து - ஒன்றாக பயணிப்பதற்கான வழி மாத்திரமன்றி - ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்படுவது என்பது - ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினும் வேண்டுகோளும் எதிர்பார்ப்புமாக இருப்பதை வெளிப்படுத்துவதற்கான சிறந்த வழியாகவும் அமையும். இதனையே ஏனைய மாவட்டங்களுக்கும் பரவலாக்குவதற்கான ஒரு முன்னோட்டமாகவும் செய்து பார்ப்போம். ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று கையொப்பங்களை பெறுவதினூடாக - சனங்கள் கூடுவதை தவிர்த்து இந்த சவால்மிக்க பணியை நிறைவேற்ற இருக்கிறோம்.

இன்ஷா அல்லாஹ் இன்று 12 ஆம் திகதி முதல் கையொப்பங்களைப் பெறும் நடவடிக்கைகளை ஆரம்பித்து இருக்கிறோம். இதற்கு அனைவரும் மனமுவந்து ஒத்துழைப்பு நல்கி - நமது சமூகத்திற்கான இந்த பயணத்தில் உங்கள் பங்களிப்பையும் வழங்குங்கள். அரசியல் அழுத்தங்கள் மற்றும் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ள ஏக காலத்தில் சிவில் சமூக அழுத்தத்தையும் நாம் வழங்குவோம். அல்லாஹ் நமது எல்லோருடைய சுமைகளையும் இறக்கிட பிரார்த்தனை செய்வோம்.

இவ்வண்ணம்
முஸ்லிம் மரபுகள் மற்றும் கலாசார மையம்
அம்பாரை கிளை, அக்கரைப்பற்று.11-05-2020
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -