முஸ்லிம் சமூகத்தின் கல்வி முன்னேற்றத்திராக தூரநோக்குடன் செயற்பட்ட கலாநிதி சுக்ரி அவர்களின் மறைவு பேரிழப்பாகும்.-கல்முனை மாநகர முதல்வர் றகீப் அனுதாபம்


அஸ்லம் எஸ்.மௌலானா-
லங்கை முஸ்லிம்கள் கல்வியில் மிகவும் பின்தங்கியிருந்த ஒரு காலப்பகுதியில் தமது சமூகத்தை கல்வித்துறையில் முன்னேற்ற வேண்டும் என்ற தூரநோக்கு சிந்தனையுடன் செயலாற்றிய கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்களின் மறைவு எமது சமூகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.

கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்களது மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;
கலாநிதி சுக்ரி அவர்கள் 04 தசாப்தங்களுக்கு முன்னர் மர்ஹூம் நளீம் ஹாஜியாருடன் இணைந்து ஜாமிஆ நளீமியா கலாபீடத்தை ஸ்தாபித்து, தனது இறுதி மூச்சு வரை அதனை சிறந்த முகாமைத்துவத்துடன் வழி நடத்தி, சர்வதேச மட்டத்தில் புகழ்பெற்ற ஒரு கல்வி நிறுவனமாக கட்டியெழுப்பியுள்ளார்.

ஒரு பல்கலைக்கழத்திற்கு ஒப்பான தரத்தில் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற ஜாமியா நளீமியா கலாபீடமானது நவீன சவால்களுக்கு முகம்கொடுக்கும் வகையில் நூற்றுக்கணக்கான மார்க்க அறிஞர்களையும் கல்வியியலாளர்களையும் உருவாக்கியுள்ளது. இன்று அவர்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் முக்கியத்துவமிக்க பதவிகளில் இருந்து கொண்டு சமூகத்திற்கும் தேசத்திற்கும் பங்காற்றி வருகின்றனர்.
இத்தகைய கலாபீடம் ஒன்றை உருவாக்கி, உயரிய பணியை சமூகத்திற்காக நிறைவேற்றிய இந்த உத்தமர்
இலங்கை வாழ் முஸ்லிம்களின் வரலாறுகளை ஆவணப்படுத்துவதில் கலாநிதி சுக்ரி அவர்கள் பெரும் பங்காற்றியுள்ளார். அதற்காக பல நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
அத்துடன் முஸ்லிம்களின் சமூக, கலாசார, பொருளாதார முன்னேற்றம் குறித்தும் சமூக சீர்திருத்தம் தொடர்பிலும் இவர் கூடிய கவனம் செலுத்தியிருந்தார்.
சமூகத்திற்கு ஒரு முன்மாதிரியான கல்வியியலாராக, தூரநோக்கு சிந்தனையாளராக வாழ்ந்து மறைந்திருக்கின்ற கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்களது நற்பணிகளை எல்லாம் வல்ல இறைவன் பொருந்திக்கொண்டு அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவர்க்கம் வழங்க பிரார்த்திப்பதுடன் அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -