நிந்தவுர் கடல் பிரதேசத்தில் இன்றிரவு( ஞாயிறு ) 10 மணியளவில் கடல் நீர் கடற்கரை வீதியையும் தாண்டி குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவியது.
இதனால் பீதியடைந்த பிரதேச மக்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கி சென்றனர். மீனவர்கள் தமது மீன்பிடி படகுகளையும் , தோணிகளையும் ஏனைய தமது உடமைகளையும் கரையை விட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வதில் பயங்கரமான கடலலைகளுக்கு மத்தியில் செயற்பட்டனர்.
கடந்த சில தினங்களாக கடலுக்கு மீன்பிடிக்க எவரும் செல்ல வேண்டாம் .பலத்த காற்று வீசுவதுடன் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும் என வானிலை அவதான நிலையம் அறிவித்த நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒரு சில தினங்களாக கடற்கரையோரத்தை அண்டிய பகுதிகளில் வாழும் மக்கள் பகலிலும் இரவிலும் மிகவும் அவதான இருப்பதுடன் , இரவு வேளைகளில் நித்திரையின்றியும் இருந்துள்ளனர். இதே வேளையில் மீனவர்கள் தொழிலின்றி தமது லருமானத்தை இழந்தவர்களாக தமது ஜீவனோபாயத்தை கொண்டு செல்வதில் மிகவும் கஸ்டமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.