ஐம்பதாயிரம் கையொப்பம் திரட்டும் நடவடிக்கையில் சட்டத்தரணி ஹபீப் ரிபான்


எஸ்.எம்.எம்.முர்ஷித்-
கொவிட் 19 நோயினால்; பாதிக்கபட்டு மரணிக்கின்ற முஸ்லீம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யக் கோரி மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐம்பதாயிரம் கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கையினை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் சட்டத்தரணி ஹபீப் றிபான் ஆரம்பித்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் கொவிட் 19 இனால் அதிகளவான மக்கள் பாதிக்கபட்டு மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் மரணித்திருக்கின்றார்கள். இவ்வாறான சூழ்நிலையில் எமது நாட்டிலும் மரணங்கள் ஏற்பட்டுள்ளதோடு மரணிக்கின்றவர்களின் உடல்கள் எரிக்கபட்டு வருகின்றன.
ஒரு மரணம் நிகழ்ந்துவிட்டால் அவரின் உடம்பிலிருந்து உயிர் பிரிக்கபட்ட பின்னர் அந்த ஜனாஸா படுகின்ற கஸ்டங்களை பற்றி அறிந்து கொண்ட நாம் ஒரு போதும் ஒரு ஜனாஸா எரிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ளமாட்டோம்.

எமது நாட்டிலே நமது மார்க்க கடமைகளையும் அதன் தேவைகளையும் எமது நாட்டின் அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்த வேண்டிய கடமைப்பாடு எமது ஒவ்வொரு முஸ்லீமுக்கும்; இருக்கின்றது.
அதனடிப்படையில் முஸ்லீம் ஜனாஸா நல்லடக்கம் செய்யபடவேண்டியதன் முக்கியத்துவத்தினை தெளிவுபடுத்தும் நோக்கில் எமது மாவட்டத்தில் ஐம்பதாயிரம் கையெழுத்துக்களை பெற்று அரசாங்கத்திடம் வேண்டுகோள் ஒன்றினை முன்வைக்க திட்டமிட்டுள்ளது.
குறித்த வேலைத்திட்டமானது அம்பாரை மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் கிழக்கு மாகான சபை உறுப்பினர் ஏ.எல். தவம் அவர்களினால் முன்னெடுக்கபட்டு வெற்றிகரமாக நடைமுறைபடுத்தபட்டுவருகின்றது.

மேலும் குறித்த செயற்பாட்டினை திறன்பட நடாத்தி முடிப்பதற்கு ஒவ்வொறு வீடுகளுக்கும் சென்று கையொப்பங்களை பெறவேண்டிய தேவை இருக்கின்றது. அதற்காக அதிகளவான தொண்டர்கள் பரந்தளவில் தேவைப்டுவதன் காரணமாக நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை களைந்து அரசியல் பேதங்களை மறந்து இவ்விடயத்தில் எல்லோரும் திறந்த மனதோடு உதவிக்கரம் நீட்ட முன்வாருங்கள்.
குறித்த செயற்பாடு இன்று சனிக்கிழமை ஆரம்பிக்கபட்டுள்ளதுடன் நாளையதினம் ஊரடங்கு அமுலில் இருப்பதால் எதிர்வரும் திங்கள் கிழமை தொடக்கம் மக்கள்மயப்படுத்தி மட்டக்களப்பு மாவட்டம் பூராகவும் கையெழுத்துக்களை எடுப்பதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளோம்.
எனவே சமூக நலனில் அக்கரை உள்ள தனிப்பட்ட சகோதரர்கள், கழகங்கள், சங்கங்கள் என அனைத்து சமூக மட்ட அமைப்புகளும் எம்மோடு சேர்ந்து நமது சமூகத்திர்கான இந்த பணியில் செயலாற்றுவதற்கு இனைந்துகொள்ளுங்கள்.

தொடர்புகளுக்கு - 0771802828, 0774345456, 0769054628, 0777892044, 0779541808, 0775588884, 0703888338.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -