மாகாண மட்டத்தில் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து பேச்சுவார்த்தை


பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும் திகதி தீர்மானிக்கப்பட்ட பின்னர் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான செயல் முறையைத் திட்டத்தை வகுப்பது தொடர்பாக மாகாண மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் எச். எம் சித்ரானந்த கருத்து தெரிவிக்கையில், இந்த விடயம் தொடர்பில் தெற்கு,. வட மத்திய மற்றும் வடமேற்கு மாகாண கல்வி அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை நிறைவடைந்திருப்பதாக தெரிவித்தார்.

ஊவா வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாண அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிவித்த செயலாளர் அதன் பின்னர் பாடசாலைகளுக்கான விசேட நேர அட்டவணை தயாரிக்கப்படும் என்றார்.

முதல் கட்டத்தில் தரம் 10 வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப்படும். இதனைத்தொடர்ந்து தரம் 13; வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கை ஆரம்பி திட்டமிடப்பட்டுள்ளது என்றும் செயலாளர் கூறினார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -