கற்றுடன் கூடிய அடை மழையினால் நோட்டன் பகுதிக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் டிக்கோயா தரவலை பகுதியில் மரமொன்று வீழ்ந்து குடியிருப்பும் சேதமாகியயுள்ளது
அதிக காற்றுடன் மழை பெய்து வருகின்றமையினால் 18/05 அதிகாலையில் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதியின் காசல்ரி கொலனி பகுதியில் தொலைத்தொடபு தூண் உடைந்து வீழ்ந்துள்ளமையினால் நோட்டன் பகுதிக்கான போக்குவரத்து பல மணித்தியலாங்கள் தடைப்பட்டுள்ளதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்
நோட்டன் லக்ஷபான ஹங்கராம்பிட்டிய. ஒஸ்போன் பகுதி.கான போக்குவரத்து காலை 10 மணிவரை தடைப்பட்டிருந்ததுடன் அட்டன் தொலைத்தொடர்பு நிலைய ஊழியர்களும் இராணுவத்தினரும் இனைந்து உடைந்து வீழ்ந்திருந்த தூணை அகற்றிய பின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது
இதே வேளை அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோய தரவலை கொலனியில் குடியிருப்புக்கு ஆபத்தை விழைவிக்கும் வகையிலிருந்த கருப்பன் தேயிலை மரத்தை வெடியகற்ற முற்பட்டபோது குறித்த மரம் குடியிருப்பின் மீது வீழ்ந்தமையினால் குடியிருப்பு பெரும் சேதத்திற்குள்ளானது
குடியிருப்பிலிருந்த வீட்டு உபகரணங்கள் சேதமாகியுள்ளதாகவும் குடியிருப்பாளர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை என்றும் அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.