அரச ஊழியர்களின் சம்பளத்தின் ஒரு பகுதியை கையகப்படுத்த நினைப்பதானது நிதி முறைமைக்கு முற்றிலும் மாற்றமானதாகும்


பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் மூலம் நிதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யாமல் மாதா மாதம் சம்பளத்தை எதிர்பார்த்து சேமிப்பு இல்லாமல் கடனுடன் வாழ்கின்ற அரச ஊழியர்களின் சம்பளத்தின் ஒரு பகுதியை கையகப்படுத்த நினைப்பதானது நிதி முறைமைக்கு முற்றிலும் மாற்றமானதாகும். சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர் தெரிவிப்பு.


எப்.முபாரக்-
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் நிதி அதிகாரத்தை கொண்டுள்ள பாராளுமன்றத்தை கூட்டி அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் மூலம் நிதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யாமல் மாதா மாதம் சம்பளத்தை எதிர்பார்த்து சேமிப்பு இல்லாமல் கடனுடன் வாழ்கின்ற அரச ஊழியர்களின் சம்பளத்தின் ஒரு பகுதியை கையகப்படுத்த நினைப்பதானது நிதி முறைமைக்கு முற்றிலும் மாற்றமானதாகும் என முன்னால் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார்.
அரச ஊழியர்களின் சம்பளம்அறவிடுவது பற்றி இன்று(8) அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையிலே அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்


கடந்த காலங்களில் அரசாங்கம் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்க முன் நாளாந்தம் கூலித் தொழில் செய்து உழைக்கக் கூடிய மக்களுக்கு இந்த அரச ஊழியர்கள் தங்களுக்கு முடியுமான வகையில் பங்களிப்புக்களை செய்திருக்கின்றார்கள். இதற்காக இவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு,

எவ்வித வர்த்தமானி அறிவித்தலும் இல்லாமல் ஜனாதிபதியின் செயலாளரின் முறையற்ற அறிவுறுத்தலுக்கமைய திணைக்களத் தலைவர்கள் ஊடாக நிதிச் சட்ட முறைமைக்கு மாற்றமாக அரச ஊழியர்களின் சம்பளத்தின் ஒரு பகுதியை கையகப்படுத்த முனைவதை மக்கள் பிரதிநிதி என்ற வகையில் வன்மையாகக் கண்டிப்பதோடு இத்தகைய செயல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.
அரசாங்கத்திற்கு நெருக்கடியற்ற வரவு செலவுத்திட்டமொன்று தேவை என்றால் உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டி நிதி அங்கீகாரத்தை பெற முடியுமென வலியுறுத்துகின்றேன் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -