காத்தான்குடி தள வைத்தியசாலை கொரோனா நொயாளிகள் இன்று ஆறு பேர் வீடு சென்றனர்.

பழுலுல்லாஹ் பர்ஹான்-

கொவிட்-19 கொரோனா வைரஸ் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி தள வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து சிகிச்சை பெற்றுவந்த 07 நோயாளிகளில் 06 பேர் உடல் நலம் முழுமையாக குணமடைந்த நிலையில் இன்று 13 புதன்கிழமை காலை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஜாஎல மாவட்ட வைத்தியசாலைக்கு சொந்தமான அம்பியுலன்ஸ் வண்டி மூலம் மேற்படி நபர்கள் 06 பேரும் பாதுகாப்பான முறையில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இங்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டவர்கள் 06 பேரும் கொழும்பு,கம்பஹா,களுத்துறை மாவட்டங்களிலுள்ள கொழும்பு பண்டார நாயக்கா மாவத்தை,ஜாஎல,பேருவளை ஆகிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

இவர்களை வழியனுப்பி வைக்கும் நிகழ்வில் காத்தான்குடி தள வைத்தியசாலை வைத்தியர்கள்,தாதியர்கள்,ஊழியர்கள் இராணுவ ,பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

காத்தான்குடி தள வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து மொத்தமாக சிகிச்சை பெற்றுவந்த 62 நோயாளிகளில் கடந்த 10 ஞாயிற்றுக்கிழமை 55 பேர் உடல் நலம் குணமடைந்து அனுப்பி வைக்கப்பட்டதோடு இன்று 13 புதன்கிழமை 06 பேருமாக மொத்தம் 61 பேர் அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன்,வைத்தியசாலையில் தற்போது (01) ஒருவர் மாத்திரம் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -