தற்காலிக ஊழியர்களின் கொடுப்பனவு முழுமையாக வழங்கப்படும் - தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி




எச்.எம்.எம்.பர்ஸான்-
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையில் ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறை காரணமாக தற்காலிக ஊழியர்கள் அவர்களது கொடுப்பனவில் ஒரு தொகையினை விட்டுக் கொடுக்க தாமக முன்வந்தனர்.

பிரதேச சபையில் ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறை காரணமாக இடைநிறுத்தப்பட இருந்த ஊழியர்கள் தாமாக முன்வந்து தங்களின் கொடுப்பனவில் ஒரு தொகையை விட்டுக் கொடுப்பதாக நேற்று நடைபெற்ற விஷேட கூட்டத்தில் வைத்து செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீனிடம் இணக்கம் தெரிவித்தனர்.

குறித்த ஊழியர்களின் கஷ்ட நிலையினைக் கருத்திற் கொண்ட பிரதேச சபை தவிசாளர், ஊழியர்களின் கொடுப்பனவில் எவ்வித தொகையும் அறவிடப்பட மாட்டாது என்றும், சேவையிலிருந்து ஊழியர்களை இடைநிறுத்துவதில்லை என்றும், அவர்களை தொடர்ந்தும் பணியில் ஈடுபடுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேச சபையில் பணிபுரியும் ஊழியர்கள் ஆபத்தான, அனர்த்த காலங்களில் தியாக உணர்வுகளோடு பணியாற்றி வருகின்றனர்.

எனவே, அவர்களுக்கான கொடுப்பனவில் எவ்வித மாற்றங்களும் இடம்பெறாது என்று தவிசாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -