சுகாதார நடைமுறைகளை மீறி வியாபாரம் செய்யும் உடுதுணி கடைகளை மூட நடவடிக்கை

பாறுக் ஷிஹான்-

சுகாதார நடைமுறைகள் மீறி உடுதுணி வியாபாரம் செய்யும் கடைகளை தொடர்ந்தும் மூட வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடும் என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட கொரோனா வைரஸ் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(10) நண்பகல் இடம்பெற்ற போது மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்:

முஸ்லிம்களின் புனித ரமலான் காலத்தில் முக்கியமாக ஆடைகள் விற்கும் கடைகளில் சனநெரிசல் சற்று கூடுதலாக இருப்பதை நாங்கள் அவதானிக்க முடிந்தது நாளையும் தளர்வு நிலை ஏற்பட்டுள்ள நிலையில் நிச்சயமாக இந்த புடவைகள் ஆடைகள் கடைகள் என்பவற்றில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த அதன் உரிமையாளர்கள் சில சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். குறிப்பாக கடைகளின் முன்பாக தொற்று நீக்கி களை வைத்து கைகளை சுத்தப்படுத்த வலியுறுத்த வேண்டும் அதே போல் கடைகளின் அளவிற்கேற்ப வகையில் தான் வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும்.

வாடிக்கையாளர்கள் சரி விற்பனையாளர் சரி முக கவசங்களை கட்டாயம் அறிந்து இருக்க வேண்டும். இந்த கடைகளுக்குள் வாடிக்கையாளர்கள் செலவிடும் நேரத்தை ஆகக்கூடியது 20 நிமிடங்களுக்குள் மட்டுப்படுத்த வேண்டும் 20 நிமிடங்களுக்குள் அவர்களது நுகர்வை முடித்துக்கொண்டு வெளியில் செல்லவேண்டும் கடைகளுக்குள் கதவுகளையும் ஜன்னல்களையும் திறந்து வைத்து குளிரூட்டி கள் நிறுத்தப்பட்டு மின்விசிறிகள் இயங்க செய்ய வேண்டும்.

சுகாதார நடைமுறைகள் மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் அதை மீறும் பட்சத்தில் கடைகளை தொடர்ந்தும் மூட வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை நேரிடும் என குறிப்பிடுகின்றேன் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -