ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் தற்போதும் உள்ள நிலையில், புதிய தொற்று ஒன்று சிறு பிள்ளைகளை இலக்குவைத்து பரவிவருகிறது என தெரிவிக்கப்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவான அளவுடைய குழந்தைகளுக்கு இந்த தொற்று வேகமாக பரவுகிறது என்றும் குறிப்பாக பிரித்தானியாவில் சிறு பிள்ளைகளிடையே வேகமாக இது பரவலாம் என்று அந்நாட்டு தேசிய சுகாதார சேவையிலுள்ள மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
லண்டன் எவலினா சிறுவர் வைத்தியசாலையில் 8 சிறுவர்கள் இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளதோடு 14 வயது சிறுவர் ஒருவர் உயிரிழந்திருக்கின்றார்.
கடுமையான உடற்சூடு, உடலில் கொப்பளங்கள் ஏற்படுவது, கண் சிவத்தல், வீங்குதல், உடல் அசதி என்பன இந்த நோயின் அறிகுறியாக உள்ளது.