முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபின் பெருநாள் வாழ்த்துச்செய்தி


ந்த அசாதாரண சூழ்நிலையில் ஆத்மார்த்தமாக புனித ஈதுல் பித்ர் நோன்புப்பெருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு என் உளமார்ந்த பெருநாள் வாழ்த்துக்கள்
ஈத் முபாரக்
குல்லு ஆமின் வஅன்தும் பிகைர்
தகப்பலல்லாஹு மின்னா வமின்கும் ஸாலிஹல் அஃமால்
கடந்த வருட நோன்பு மற்றும் பெருநாளை ஒருவகையான அச்ச சூழலில் கடந்தோம். 

இம்முறை இன்னொரு வகையான அச்ச சூழ்நிலையில் கழிக்க நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளோம்.

எம்மைப் பொறுத்தவரை ரமழான் என்பது மிகப்பெரும் அருள்களை சுமந்த மாதம். அது, உலகமே கொரோனா அச்சத்தால் அடங்கிப் போன சூழ்நிலையில் அதை எப்படி நாம் முகம் கொடுக்கவேண்டுமென்று நமக்கு பயிற்றுவித்து விடைபெறுவதாகவே நான் உணர்கின்றேன். 

நம் உள்ளங்களில் அது விதைத்த பொறுமையும், கட்டுப்பாடும், ஈகைப் பண்பும், இறைவன் மேல் பொறுப்பு சாட்டும் தவக்குல் பண்பும், இறையில்லம் செல்ல முடியாமல் இருப்பிடத்தில் தொழுகை எனும் கடமையை கடைப்பிடித்த கடமையுணர்வும்...... இந்த பூலோக சவாலை சமாளிக்க புனித ரமழான் நமக்கு தந்த உயர் பயிற்சி என்று உணர்ந்து கொள்வோம்.

பெற்ற பயிற்சிக்கு முரணாக செயற்படாமல் பெருநாள் தினத்தை ஆத்மார்த்தமாக அமைதியாக கொண்டாடும் என் இனிய இஸ்லாமிய உறவுகளுக்காக இறைவனிடம் இருகரமேந்தி பிரார்த்திக்கின்றேன்.

எம்மைவிட்டும் விடைபெற்ற ரமழான் நாட்களில் நாம் அனைவரும் மட்டுமன்றி உலகளாவிய இஸ்லாமிய உம்மத்தும் இரு கரம் ஏந்தி ஏக வல்லவனிடம் கேட்ட பிரார்த்தனைகள் வீண்போகாது என்று நான் ஆழமாக விசுவாசிக்கின்றேன். 

இனிவரும் தினங்கள் இன்ஷா அல்லாஹ் எம்மை விட்டும் இந்த கொரோனா நீங்கும் காலமாக அமையும் என்று உறுதியாக நம்புகின்றேன். கொரோனாவுக்கு பிந்திய புதிய உலகு, அமைதியும் சமாதானமும் நீதியும் சுபீட்சமும் கொண்டதாக அமையும் என்று எதிர்பார்க்கின்றேன்.

எனவே இந்த புனித பெருநாள் தினத்தில் நோய் நொடிகள் நீங்கிய, அநீதி அடக்குமுறைகள் அகன்ற புதிய உலகம் பிறக்கவும் நம் நாட்டில் நீதியும் நேர்மையும் பலம்பெற்று இனவாதம், ஊழல் , அடக்குமுறை இல்லாத சுபீட்சமிக்க சமூக வாழ்வு மலரவும் எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திகின்றேன்.

அனைவருக்கும் என் இனிய ஈத் முபாரக்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -