கல்வியில் தொழிநுட்பம்


21ம் நூற்றாண்டில் அறிவியலின் விஸ்வரூப வளர்ச்சியானது அனைத்துத் துறைகளிலும் வியாபித்து வருவதை காணலாம். அந்தவகையில் இத் தொழிநுட்ப வளர்ச்சியானது கல்வித்துறையிலும் முக்கிய பங்கினை வழங்கியுள்ளது. தொழிநுட்ப சாதனங்கள் பொழுதுபோக்கிற்காக மட்டும் அல்லாமல் இன்றைய காலகட்டங்களில் கற்றலுக்கான கருவியாகவும் மாற்றமடைந்துள்ளது. எமது நாட்டின் கல்வித்துறையும் இத் தொழிநுட்ப வளர்ச்சியை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்தி வருகின்றது என்றே கூற வேண்டும்.
அவற்றை சற்று ஆழமாக பார்த்தால், சமீப காலமாக ஊழஎனை 19 அசாதாரண சூழ்நிலையில் விடுமுறைகள் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் மிக முக்கிய ஊடகங்களாக தொலைத் தொடர்பு சாதனங்களே உதவுகின்றன. மாணவர்களுக்கான பாடநெறிகள் மற்றும் கற்றல் செயற்பாடுகள் என்பன வானொலி, தொலைக்காட்சிகளில் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ஏற்பாடுகளின் கீழ் ஒலி மற்றும் ஒளிபரப்பப்படுகின்றன. அது மட்டுமன்றி மாணவர்களுக்கு பாடசாலை மற்றும் வலய ரீதியாக றூயவளயிpஇ ணுழழஅ யுppடiஉயவழைளெஇ புழழபடந உடயளள மூலமாக கற்பிக்கப்படுகின்றன. அது மாத்திரமன்றி கல்வி அமைச்சினால் இணையவாயிலான கற்றல்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
உதாரணமாக நு-தக்சலாவ, கல்விக்கூடம் என்பவற்றை கூறலாம். இது கல்வியில் தொழிநுட்பத்தின் பங்கிற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு எனலாம் அது மட்டுமன்றி அனேகமான பாடசாலைகளில் மற்றும் பல்கலைக்கழகங்களில் நவீன தகவல் தொழில் நுட்ப சாதனங்களை பயன்படுத்தி கற்றல், கற்பித்தல் நடைபெறுகின்றன. உதாரணமாக எமது நாட்டில் அநேக பாடசாலைகளில் பல்லூடகத்தை (ஆரடவiஅநனயை) பயன்படுத்தி கற்றல் செயற்பாடுகள் நடைபெறுகின்றன. இம் முறை ஆரம்பத்தில் கொழும்பு மற்றும் ஓட்டமாவடியில் ஸ்மார்ட் கிளாஸ் முறையில் கற்பிக்கப்பட்டது.
இத்தொழிநுட்பம் சென்ற வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் கற்றல் நடவடிக்கைகள் காணொளிகளாகவும் பல்லூடக காட்சிகளாகவும் கற்பிக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி ஆசிரியர்களுக்கு கணினி பற்றிய அறிவினை வழங்கும் முகமாக கருத்தரங்குகளும் முன்னெடுக்கப்படுகின்றது. இது இன்று ஆசிரியர்கள் மட்டில் நடைமுறையில் உள்ள ஒரு வினைதிறன் காண் அம்சமாகவும் மாறியுள்ளது.
மேலும் நவீன மயப்படுத்தப்பட்ட பாடங்கள் அதாவது தொழில்நுட்ப பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக, விவசாய தொழில்நுட்பம், விஞ்ஞான தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், மீன்பிடித் தொழில் நுட்பம் என அனேக பாடங்கள் தொழில்நுட்பத்தில் புகுத்தப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அதுமட்டுமின்றி கலை, விஞ்ஞானம், கணிதம் போன்ற துறைகளுடன் இன்று அதாவது 2015 ஆம் ஆண்டுகளில் இருந்து தொழில்நுட்பத்துறை உயர்தரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் தற்காலத்திற்கு ஏற்ற வகையில் தொழில்நுட்ப உலகை மையப்படுத்திய வகையில் இத்துறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்பத்துறை (குயஉரடவல ழக வுநஉhழெடழபல) ஒரு தனி பீடமாகக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இது இலங்கையில் தொழிநுட்பம் சார் கல்விக்கு வழங்கிய முக்கியத்துவம் எனலாம்.
மேலும், நவீன தொழில் உலகை மையப படுத்திய விதத்தில் தகவல் தொழில்நுட்பமானது கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது. பாடசாலையில் உயர்தரம் மட்டுமன்றி தரம் 6 தொடக்கம் கா.பொ.த சாதாரண தரம் வரை அனைத்து மாணவர்களுக்கும் தகவல் தொடர்பாடல் ஒரு பாடமாக கற்பிக்கப்படுகின்றது. அதுமட்டுமின்றி பல்கலைக்கழகங்களிலும் முக்கிய கற்கையாக கற்பிக்கப்படுவதுடன். சிரேஷ்ட இடைநிலை பாடசாலைகளுக்கு 1000 கணனி கற்கை நிலையங்கள் அமைத்தல் மற்றும் மாணவர்களின் கற்றலை இலகுபடுத்தும் வகையில் வுயடி மற்றும் டுயி வழி என்பனவும் கல்வி அமைச்சினால் வழங்கி வைக்கப்பட்டு உழஅpரவநச யளளளைவநன டநயசniபெ முறையில் கற்றல் ஊக்குவிக்கப்படுகின்றது.

அது மட்டுமன்றி, மனித ஆளுமையை விருத்தி செய்யும் நோக்குடன் வழங்கப்படும் தொலைக்கல்வி, வாழ்நாள் நீடித்த கல்வி என்பவற்றிலும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ழடெiநெ உடயளள மற்றும் நேர்காணல்கள் என்பன நடைமுறையில் உள்ளன. மேலும் எனைநழ உழகெநசநnஉந மூலம் வகுப்புகள் நடைபெறுகின்றன.
மேலும் மாணவர்களின் கற்றல்களை ஊக்குவிக்கும் வகையில் இணையவாயிலாக அனேக துறைசார் மற்றும் மொழிசார் புத்தகங்களை தரவிறக்கம் செய்து கற்கக்கூடிய வசதிகளும் காணப்படுகின்றது.

மாணவர்களுக்கு வரலாற்று நிகழ்வுகளை வெறும் பாடமாக அல்லாமல் வீடியோக்கள், டிஜிட்டல் புகைப்பட பிரதிகளை கொண்டு இலகுவாக கற்பிக்கப்படுகின்றது. கற்றல்; சார் போட்டி நிகழ்ச்சிகள் தற்காலத்தில் தொலை தொடர்பு சாதனங்களில் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். உதாரணமாக விவாதப்போட்டிகள், வினாவிடைப்போட்டிகள்( பஞ்சதந்திரம்), வானொலி புதிர்போட்டிகள் என்பவற்றை கூறலாம். நாடாளாவிய மற்றும் சர்வதேச ரீதியாக தொழிநுட்ப கண்டுபிடிப்புக்கள் சார் கண்காட்சிகள் நடைபெறுகின்றன. இதன் மூலம் தொலைத்தொடர்பு சாதனங்களானது எமது மாணவர்களின் திறமைகள் உலகறிய செய்யப்படுகின்றன.
மாணவர்களுக்கான தேசிய ரீதியான பரீட்சைகளும் இணையத்தின் உதவியுடன் நடாத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக கா.பொ.த உயர் தர மாணவர்களுக்கான புஐவு பரீட்சை மற்றும் தொழிநுட்ப துறை சார் மாணவர்களுக்கான செய்முறை பரீட்சைகள் நடைபெறுகின்றன. இவை தொழிநுட்பத்தின் பங்கு கல்வியில் எவ்வாறு உள்ளது என்பதை தெளிவுபடுத்துகின்றன.
இவை போன்ற அனேக செயற்பாடுகள் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றன. கல்வியை வெறுமனே மாணவர்களுக்கான புத்தக சுமையாக மட்டுமல்லாமல் செயல்வழி கற்றல், செய்து கற்றல், விளையாட்டின் மூலம் கற்றல் என்பவற்றை தொழிநுட்பம் சார் கற்றலை இலகுபடுத்தியுள்ளது. தற்கால உலகிற்கு எம்மை தயார்படுத்தவும் தொழில் உலகில் தனித்துவமாக பிரவேசிக்கவும் வினைத்திறனான சமூகத்தை உருவாக்குவதில் தொழிநுட்பசார் கல்வி மிக முக்கியமானதாகும்.

ஜெயசீலன் கிறிஸ்ரினா
2ம் வருடம்
கல்வியியல் சிறப்புக்கற்கை
கல்வி பிள்ளை நலத்துறை
கிழக்குப் பல்கலைக்கழகம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -