கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கவும், சுகாதாரத்திற்கேற்ற முறையில் கைகளைச் சுத்தம் செய்யவும் கால்களால் இயக்கும் நீர்க் குழாயில் கை கழுவும் வசதிகள் கொண்ட தொழில் நுட்பம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கால்களால் இயக்கும் நீர்க் குழாயில் கை கழுவும் வசதிகள் கொண்ட இயந்திரத்தினை ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் மக்களின் பாவனைக்கு பொறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் சேவை பெறுவதற்கு வரும் மக்களை கிருமி தொற்றில் இருந்து பாதுகாக்கவும், சுகாதாரத்திற்கேற்ற முறையில் கைகளைச் சுத்தம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சின் அனுசரணையோடு நேட் நிறுவனத்தின் தொழில்நுட்ப வழிகாட்டலில் இலகுவாக பாதங்களின் ஊடாக கைகளைக் கழுவும் இயந்திரம் கண்டு பிடிக்கப்பட்டது. இவை அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பயன்பாட்டுக்கு வழங்கும் நோக்காக செயற்பட்டு வருவதாக ஓட்டமாவடி விதாதா வள நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எச்.புர்ஹானுதீன் தெரிவித்தார்.
இந்த இயந்திரத்தினை நேட் நிறுவனத்தினுடைய பொறியியலாளர்கள் மூலம் உருவாக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கவும், குறித்த இயந்திரம் மூலம் நீர் வீண் விரயம் செய்வதை தடுக்க முடியும்.
எனவே எமது பிரதேசத்திலுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பயன்பாட்டுக்கு வழங்குவதற்கான வேலைத் திட்டங்களை நேட் நிறுவனத்தினர் வதாதா செயற்றிட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்தி வருகின்றனர் என ஓட்டமாவடி விதாதா வள நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எச்.புர்ஹானுதீன்; மேலும் தெரிவித்தார்.