தபாலகம் பூட்டு அரச கொடுப்பனகளை பெற வந்த மக்கள் பெரும் அவதி.

 ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-

ட்டன் தபால் நிலையம் இன்று (16) திகதி திறக்கப்படாததன் காரணமாக தூர பிரதேசங்களிலிருந்து முதியோர் கோடுப்பனவு மற்றும் 5000 ரூபா கொரோனா பாதிப்பு கொடுப்பனவு உள்ளிட்ட கொடுப்பனவுகளை பெறுவதற்காக வந்தவர்கள் கொடுப்பனவுகளை பெற முடியாது பெரும் சிரமங்களை எதிர் நோக்கினர்.

குறித்த தபாலகம் சனிக்கிழமை நாட்களில் வழமையாக அரைநாள் பகல் ஒரு மணிவரை ஏனைய நாட்களில் திறந்திருக்கும் ஆனால் இன்றைய தினம் இது மூடப்படுவதாக பொது மக்கள் அறியாதனால் இன்று அதிகாலை முதல் கொடுப்பனவுகளை பெறுவதற்காக வருகை தந்திருந்தனர்.
இன்றை தினம் குறித்த கொடுப்பனவுகளை பெற முடியாத மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திம்பினர்.

இது குறித்து பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில்..
கடந்த சில தினங்களாக அரசாங்த்தினால் வழங்கப்படும் கொடுப்பனவுகள் இந்த தபாலகத்தில் வழங்கப்பட்டன.கொடுப்பனவுகளை பெறுவதற்காக அதிகமான மக்கள் வருகை தந்தமையினால் எங்களுக்கு கொடுப்பனவுகளை பெற முடியாது. போயின அதனால் நாங்கள் இன்று இந்த கொடுப்பனவினை பெற்றுக்கொள்ள வந்தோம்.

ஒரு சிpலர் இரண்டு மூன்று நாள் வருகை தந்தும் கொடுப்பனவுகளை பெற முடியாத நிலையியே உள்ளனர். அரைநாள் திறந்திருக்கும் என்று தான் காலையிலிருந்து இப்ப 11.00 மணி ஆகிவிட்டது இன்னமும்' இது திறக்கப்ப்வில்லை.இந்த கொடுப்பனவினை பெறுதவற்காக சிலர் நோயாளர்களையும் அழைத்து வந்திருக்கிறார்கள்.எவ்வித அறித்தலும் இன்றி மூடிக்கிடப்பதாக இவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -