அமைச்சர் தொண்டமானின் பூத உடல் அக்கினியில் சங்கமம்(படங்கள்)

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
லங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூத உடல் இன்று நோர்வுட் (31) ம் திகதி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் மாலை 5.30. மணியளவில் ஆயிரக்கணக்கான அரசியல் தொழிற்சங்க அரச அதிகாரிகள் பொது மக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில் அக்கினியில் சங்கமம்.
மலையக நகரங்கள் இறுதி ஊர்வலத்திற்காக வெள்ளைக் கொடிகளால் அலங்கரிக்;கப்பட்டுள்ளதுடன் கண்ணீர் அஞ்சலி பதாதைகளும் தொங்கவிடப்பட்டுள்ளன.
நாடெங்கிலும் கொரோனா தொற்று பரவுவதனை தடுப்பதற்காக விசேட பொலிஸ் ஊரடங்கு மற்றும் மற்றும் தனிமைப்படுத்தும் சட்டம் இன்று (31) இரவு 12 மணிவரை அமுல்படுத்தப்பட்டுள்ளதனால் பொது மக்கள் தமது தலைவனுக்கு வீடுகளிலும் சந்திகளிலும் தங்களது கண்ணீர் அஞ்சலியினை செலுத்தி வருகின்றனர்.
தோட்டங்களில் கடந்த 27 ம் திகதி தொடக்கம் வேலையின்றி தொழிலாளர்கள் துக்க தினம் அனுஷ்ட்டித்து வருகின்றனர்.
மக்கள் ஒன்று திரள்வதனை தவிர்ப்பதற்காக நகரங்களிலும் வீதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதனால் பொது அதனையும் தாண்டி தேயிலை மலைகள் வழியாக பல கிலோ மீற்றர் நடந்து சென்று கொட்டகலை சில். எல.; எப் வளாகத்தில்

வைக்கப்பட்டுள்ள தனது தலைவனின் பூத உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பொது மக்களின் பாதுகாப்பு கருதி வாகனங்களில் செல்வதனை பாதுகாப்பு பிரிவினர் தடை செய்துள்ளதுடன் வாகனங்களும் திருப்பி அனுப்பப்படுகின்றன.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவூடல் நேற்று (30) அவரது ரம்பொட வேவண்டன் பூர்வீக இல்லத்தில் இந்து மற்றும் பௌத்த சமய வழிபாடுகள் மற்றும் சமய கிரியைகளின் பின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொட்டகலை தொண்டமான் தொழிநுட்ப வளாகத்திற்கு ரம்பொட நுவரெலியா,நானுஓயா,தலவாக்கலை,கொட்டகலை வீதி ஊடாக பல்லாயிரக்கணக்கான பொது மக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில் கொண்டுவரப்பட்டன.
அமைச்சர் பூதவுடுல் பொது மக்கள் அஞ்சலிக்காக கொட்டகலை தொண்டமான் தொழிநுட்ப மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் பெரும் எண்ணிக்கையிலான ஆதரவாளர்களும் பொது மக்களும் அவருக்கு இறுதி அஞ்சலியினை தெரிவித்துவருகின்றனர்.
இவரது இறுதி கிரியைகள் இன்று (31) ம திகதி அரச மரியாதையுடன் அரசியல் மற்று தொழிற்சங்கள் உள்நாட்டு வெளிநாட்டு தூதுவர்கள் உட்பட பலரின் பங்களிப்புடன் நோர்வூட் சர்வதேச விளையாட்டு மைதானத்தில் தகனம் செய்யப்படவுள்ளன.இதற்காக நோர்வூட் பிரதேச சபை, சுகாதார பிரிவினர் மற்றும் அதிரடிப்படையினர், பொலிஸார் ஆகியோர் இணைந்து இறுதிக்கிரியைக்களுக்கான ஏற்பாடுகளை செய்துவருகின்றனர்.
இந்நிகழ்வுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ முன்னாள் அமைச்சர் ரவுப் ஹக்கிம் மஹிந்தா நந்த அலுத்கமகே,நவீன் திசாநாயக்க ஜி.எல் பீரிஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர.


















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -