தேர்தல் வெற்றிக்காக புத்த பிக்குகளை மஹிந்த அரசு முன்னிலைப்படுத்தி வருவதாக வன்னியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்
நேற்றைய தினம் (4) பிரதமர் மஹிந்தவினால் கூட்டப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் எதிர்பாராத விதமாக பிக்குகள் அணியினர் சமூகம் தந்திருந்தனர் அவர்களுக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது.
மஹிந்த ராஜபக்சவும் ஜனாதிபதி கோத்தபாயவும் பிக்குகளை முன்னலைப்படுத்தி பௌத்த விகாரைகளின் ஊடாக தங்களது இரசிய பிரச்சாரத்தை எடுத்துச் சென்று தேர்தலில் வெற்றிபெற முயற்சி எடுத்து வருகிறார்களா? என்னும் சந்தேகம் எழுகிறது .
மேலும் இந்த கூட்டத்தில் மதகுருமாரை அழத்து வரும் முயற்சி இருந்திருந்தால் இந்து கிறிஸ்தவம் முஸ்லிம் மத குருமார்களும் அழைக்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் அப்படி அழைக்கப்பட்டதாக தெரியவில்லை .
மேலும் இதில் கலந்து கொண்ட பௌத்த பிக்குக்கள் எந்தவித ஆதாரங்களும் இன்றி வெறுமனே கொரோனாவை கட்டுப்படுத்தி விட்டார்கள் என்ற விதத்தில் அரசை துதிபாடி சென்றதை அவதானிக்க முடிந்தது .
இந்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கேட்பாரற்று வந்து இருந்து விட்டு சென்றதையும் காணக்கூடியதாக இருந்தது .
ஒரு அவசரகால நடவடிக்கைகளுக்கு தேவையில்லாதவர்களுக்கு கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்குவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது .
பிக்குகளை வைத்து தேர்தல் வியூகம் வகுக்கப்படுகிறதா? அதற்காகத்தான் பிக்குகள் முன்னிலைப் படுத்தப்படுகின்றார்களா? என்று வைத்தியகலாநிதி சிவமோகன் அ.வர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.