முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சதாசிவம் தெரிவிப்பு.
ஹட்டன் கே.சுந்தரலிங்கம்- நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பிரச்சினை தொடர்ந்நது மலையக பகுதியிலிருந்து கொழும்பு சென்று வேலை செய்து வந்த எமது தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகள் தற்போது வேலையிழந்து செய்வதறியாது நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வேலையின்றி இருக்கும் போது அவர்களுக்கு விரக்தியும்,தவறான எண்ணங்களும் தோன்றும.; எனவே இவர்களுக்கு மலையக பகுதிகளில் வேலைகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் மலையக பகுதியில் தற்போது மூடிகிடக்கும் தேயிலை தொழிற்சாலைகளில் கம்பனியுடன் இணைந்து தொழில் துறைகளை ஆரம்பிக்குமாறு பிரதமிரிடம் கேட்டுக்கொண்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதமரின் ஆலோசகருமான எஸ் சதாசிவம் தெரிவித்தார்.
இன்று (02) நுவரெலியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவர் இவ்வாறு தெரிவித்தார்;. அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.
மலையக பகுதியில் இன்று ஏராளமான தரிசு நிலங்கள் கிடக்கின்றன. அத்தோடு பல தேயிலை தோட்டங்கள் காடாகி கிடக்கின்றன.இவற்றினை தற்போது வேலையிழந்துள்ள இளைஞர்களுக்கு கம்பனிகளுடன் பேசி பெற்றுக்கொடுக்க வேண்டும்.அப்போது அவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கு இலவாக இருக்கும் என்று கேட்டுக்கொண்டேன் அதற்கு அவர் இது கொள்கையளவில் எடுக்கப்பட வேண்டிய முடிவு. ஆகவே அதனை பெருந்தோட்டத்துறை அமைச்சருடனும் கம்பனிகளுடனும்; பேசி முடிவு சொல்வதாக தெரிவித்தார்.
இதே வேளை கொழும்பில் 5000 மலையக இளைஞர் யுவதிகள்; சிக்குண்டு இருப்பதாக எனக்கு தொலைபேசிகள் ஊடாக அழைப்புக்களை கொடுத்தார்கள். அவர்களை பெற்றோர்களுடன் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கும் 7000 பேர் மலையகப்பகுதிக்கு வந்ததாக சிலர் தெரிவிக்கின்றனர்.அவர்கள் எவ்வாறு கணக்கிட்டார்கள் என்பது எனக்கு தெரியாது. மலையகத்தில் தற்போது உள்ள இளைஞர்கள் வேலை இழந்து பாதிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் இவ்வாறான கருத்துக்களை தெரிவிப்பதன் மூலம் அவர்கள் எப்படி வந்தார்கள்,எவ்வாறான நிலையில் இருக்கிறார்கள் என்பது தொடர்பாக அறியாமல் கருத்துக்கள் வெளியிடுவதன் மூலம் மேலும் மேலும் இவர்கள் பிரச்சினைக்ளுக்கு உள்ளாகுவார்கள். எனவே இந்த கருத்துக்கள் தெரிவிப்பவர்களிடம் தான் இதை பற்றி கேட்க வேண்டும். என தெரிவித்த அவர் இன்று எதிர்கட்சிகள் தேர்தலை நடத்த வேண்டும். கணக்கு காட்ட வேண்டும் என்றெல்லாம் கூறி வருகிறது. இன்று நாடு எதிர்க்நோக்கியுள்ள இந்த கொரோனா பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கே முதலில் முயற்சிக்க வேண்டும். அதை விடுத்து பாராளுமன்றத்தை கூட்டுங்கள் என்று கூறுவது பொருத்தமற்றது.
இன்று ஜனாதிபதியும் பிரதமர் அவர்களும் கொரோனாவினை கட்டுப்படுத்த சிறந்த முறையில் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆகவே இதற்கு அனைவரும் கரம் கொடுத்து உதவி செய்துவிட்டு பின்னர் எமது அனைத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.