பதில் தவிசாளரின் சிறுபிள்ளை தனமான செயற்பாடு கண்டிக்கத்தக்கது- சபையில் உறுப்பினர்கள் ஆதங்கம்.


பாறுக் ஷிஹான்-
நாவிதன்வெளி பிரதேச சபையின் பதில் தவிசாளரின் சிறுபிள்ளை தனமான செயற்பாடு கண்டிக்கத்தக்கது என சபையில் உறுப்பினர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

நாவிதன்வெளி பிரதேச சபையின் 27வது மாதாந்த அமர்வு சபையின் பதில் தவிசாளர் ஏ.கே.அப்துல் சமட் தலைமையில் செவ்வாய்க்கிழமை(12) காலை 10 மணியளவில் சபையின் கூட்ட மண்டபத்தில் ஆரம்பமானது.

இந்த கூட்டத்தொடரின் போது உறுப்பினர்களிடையே வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றது. இதன்போது நாவிதன்வெளி பிரதேச சபையில் பிரதேச சபை உறுப்பினர்கள் கொடுக்கும் பிரேரணைகளை முன்கூட்டியே வெளி (ஊடகங்களுக்கு) உப தவிசாளர் அனுப்பி வைப்பது முறை கேடானது என குற்றச்சாட்டுகளை உறுப்பினர்கள் இன்றைய கூட்டத்தொடரில் முன்வைத்தனர்.

இதன் போது மேலும் ஆதங்கத்தை வெளியிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள்

பதில் தவிசாளர் பிரதேச சபை வாகனங்களை சொந்த விடயங்களுக்கு பயன்படுத்தி வருவதோடு அந்த வாகனங்களில் வெளி நபர்களை ஏற்றிசெல்வது பிரதே சபை சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்துவதாகவே கருத முடியும்.சபையில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள்,ஊழியர்களை தர குறைவான வார்த்தைகளை பேசி அவமானப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது ஒன்று பிரதேச சபை வேலைப்பாடுகளுக்கு பிரத்தியேக நபர்களை பயன்படுத்துவதற்கு யாரிடம் அனுமதி பெறப்பட்டது?போன்ற கேள்விகள் தொடுக்கப்பட்டது இவை அனைத்திற்கும் பதில் தவிசாளர் மௌனமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதில் தவிசாளரின் செயற்பாடுகளுக்கு எதிராக பிரதேச சபை உறுப்பினர்கள் மு.நிறோஜன்,அ.குணரெட்னம், அ.சுதர்சன்,நா.தர்சினி எம்.பி.நிவாஸ் ஆகியோர் நம்பிக்கை இல்லா பிரேணனையை பிரதேச சபை செயலாளரிடம் வழங்கிய போது தவிசாளரின் அனுமதிக்காக விடப்பட்ட போது அதனை பதில் தவிசாளர் ஊடகவிலாளர்களுக்கு எவ்வாறு சமூக வலைத்தளத்தில் அனுப்ப முடியும் என வினவினார்.

 நம்பிக்கை இல்லா பிரேரணையில் கையொப்பம் இட்ட ஐந்து உறுப்பினர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு பதில் தவிசாளர் கடிதங்களை அனுப்பியுள்ளதாகவும் இதன்போது தெரிவித்தனர்.

இவ்வாறான செயற்பாடுகளை இனி வரும் காலங்களில் பதில் தவிசாளர் மீது நம்பிக்கை இல்லா பிரேணனையை கொண்டு வந்து பிரதேச சபை உறுப்பினர் ஒருவரது தலைமையில் சபையை வழிநடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

கடந்த கூட்டறிக்கை திரிவு படுத்தப் பட்டு இருப்பதோடு கணக்கறிக்கையில் செலவு மாத்திரம் காட்டப்பட்டுள்ளதோடு வரவு பற்றி குறிப்பிடவில்லை என நிராகரிக்கப்பட்ட கூட்டறிக்கையையும்,கணக்கறிக்கையையும் இம்மாத இறுதி திகதிக்கு முன்னர் விஷேட கூட்டத்தில் சரியான திருத்தங்களுடன் முன்வைக்க வேண்டும் என சபையில் உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டது.

மேலும் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் தவராசா கலையரசன் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட உள்ள காரணத்தினால் சுய விடுமுறையில் தேர்தல் முடியும் வரை உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -