தமிழர்களின் காணிகளை சூட்சமமாக அபகரிக்க முற்படும் படையினர் -சிவமோகன் குற்றச்சாட்டு

கொரோனாவை காரணம் காட்டி உணவில் தன்னிறைவை பெற வேண்டும் என்ற அடிப்படையில் அனைத்து மக்களையும் தங்களது காணிகளில் விவசாயம் செய்யுமாறு ஆரம்பத்தில் கோரிக்கைகள் விடப்பட்டு வந்தன அந்த அடிப்படையில் படையினர் அவர்களின் முகாம்களில்விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர
பொது மக்களும் அதிகப்படியானவர்கள் அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு தற்பொழுது உள்ள சூழலில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்

இந்த கால கட்டத்தில் விவசாயம் செய்யாமல் இருக்கும் காணிகளை அடையாளம் காணுதல் என்ற போர்வையில் பொது மக்களின் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் இறங்கியிருப்பதாக பல்வேறு முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுகின்றன

ஏற்கனவே இராணுவத்தால் எமது பொது மக்களின் காணிகள் யுத்தத்தை காரணம் காட்டி பிடிக்கப்பட்டிருந்தது அவை இன்னும் விடுவிக்கப்பட வில்லை

அதற்காக பாரிய போரட்டங்களை நடத்த வேண்டிய கட்டத்தில் எமது மக்கள் இருந்தார்கள் என்பது உண்மை ஆனால் அரசு ஒரு தொகுதி நிலங்களைத்தான் விடுவித்திருந்தார்கள்

பிடிக்கப்பட்ட பொது மக்களின் பெருமளவிளான நிலங்களை இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக கூறி அவை வழங்கப்படாமல் இருந்தது

இப்படியாக முல்லை புதுக்குடியிருப்பில் 682 முகாம் வட்டுவாகலில் அமைந்துள்ள கோத்தபாய கடற்படை முகாம் கேப்பாப்பிலவு காணிகள் மற்றும் வவுனியா மன்னார் போன்ற இடங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது

அப்படி இருக்கும் போது மீண்டும் கொரோனாவை காரணம் காட்டி தமிழர்களின் காணிகளை சூட்சுமமாக அபகரிக்கும் திட்டத்தை படையினர் ஆரம்பித்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது

இந்த சூழ்ச்சியை படையினர் அரசின் ஒத்துழைப்பில்லாமல் மேற்கொள்ள முடியாது தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் சூழ்ச்சியினை அரசு உடனடியாக கை விட வேண்டும் என்று வைத்தியகலாநிதி சிவமோகன் அவர்கள் கேட்டுக் கொண்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -