ரிஸ்வானின் குடும்பத்திற்கு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உதவி




தலவாக்கலை பி.கேதீஸ்-
லவாக்கலை மேல்கொத்மலை நீர்தேக்கத்தில் தற்கொலை செய்ய முயற்சித்து நீர்தோக்கத்தில் பாய்ந்த யுவதி ஒருவரை நீர்த்தேக்கத்தில் குதித்து யுவதியை காப்பாற்றி தன்னுயிரை தியாகம் செய்த ரிஷ்வான் எனும் உயரிய உள்ளம் கொண்ட இளைஞனின் மறைவிற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இரங்கல் தெரிவித்துள்ளதாகவும் ரிஸ்வானின் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தரமான அரச தொழில் ஒன்றை பெற்றுக்கொடுப்பதற்கும்,ரிஷ்வானின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவிகளை செய்தற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் உறுதியளித்துள்ளார் என இ.தொ.கா உபதலைவரும் முன்னால் மத்திய மாகாண சபை உறுப்பினருமான பி.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் இரங்கல் செய்தியுடன் ரிஸ்வானின் பூதவுடலுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு அன்னாரின் குடுப்பத்திற்கு தமது இரங்கலை தெரிவித்தார். தனது இரங்கல் செய்தியில் தெரிவித்ததாவது

இந்த உலகத்தில் நல்ல மனிதர்கள் வாழ்ந்து கொண்டு இருப்பதற்கு அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் வாழ்க்கையை வைத்துத்தான் பார்க்கப்படுகிறது.ரிஸ்வான் போன்றவர்கள் இந்த யுவதி எந்த மதம் இனம் கூட தெரியாமல் தன் உயிரைத் துச்சமாக எண்ணி நீரில் மூழ்கி உயிரை இழந்துள்ளார்.இனவாதம் பேசுபவர்கள் இவ்விடத்தில் ரிஸ்வானை பார்த்து வெட்கித் தலைகுனிய வேண்டும். ரிஸ்வானை நற்பழக்க வழக்கத்தோடும் மனித நேயத்துடனும் வளர்த்த அவரின் பெற்றோருக்கே இந்த பெருமைச் சேரும். இவரின் பிரிவால் வாடும்,மனைவி,பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஓர் உயிரை காப்பாற்ற தன் உயிரை தியாகம் செய்த ரிஷ்வானின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கொள்வதோடு,குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆறுதல்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளதாகவும் குடும்ப தலைவனை இழந்து தவிக்கின்ற இக்குடும்பதாரின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு,அவர்களுக்கான வாழ்வாதாரத்திற்கு பங்களிப்பை வழங்கக்கூடிய வகையில் உதவிகளை செய்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -