நீங்க வந்தா புலி என்னச் சுடமாட்டானா? இஸ்ஸதீன் சேரும் தைரியமும்.


ஆசாத் ஆதம் லெப்பை-
ரசியல் உலகின் அடியேன் சந்தித்த மிகப்பெரிய தைரியசாலி எம்.எச் சேஹூ இஸ்ஸதீன் எனும் வேதாந்தி மாத்திரம்தான். அதன் பின்னர் அத்தகைய துணிச்சல் காரரை காணவே இல்லை.

1988 களில் அடியேன் கொழும்பு டாம் வீதியில் அமைந்திருந்த சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைச் செயலகத்தில் செயலாற்றுகிறேன். (சிறிமா அம்மையார் காத்தான்குடியில் கறுப்புக்கொடி காட்டிய சம்பவம் தொடர்பாக இந்தியப்படையும் பொலிசாரும் என்னைத் தேடி வலை விரித்தபோது ஹிஜ்ரத்தாய் கொழும்புக்கு வந்து தலைவரிடம் தஞ்சமடைந்து இங்கு பணியாளராகியது. அது பெரிய கதை பின்னர் எழுதலாம்.

அப்போது வாழைச்சேனையைச் சேர்ந்த சில கட்சிப் போராளிகள் கட்சியின் போஸ்டர்களை எடுத்துச் சென்று தங்கு விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது திடீரென கட்சி தலைமையகத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது" எல்.ரி.ரி.யினர் லொட்ஜிற்குள் புகுந்து போராளிகளைத் தாக்கிவிட்டு போஸ்டர்களை எடுத்துச் சென்று விட்டார்கள்." என்று...

தகவல் இஸ்ஸதீன் சேரின் காதுகளுக்கு எட்ட உடனே வாகன சாரதியை அழைத்தார். அவரை காணவில்லை. (அப்போது இஸ்ஸதீன் சேர் வடகிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர்) உடனே பிஸ்டலை கையிலெடுத்தார் மள மள வென ஆறாம் மாடியிலிருந்து கீழே இறங்கினார். அவரது மெய்ப்பாதுகாவலர்கள் "சேர் வேண்டாம் போக வேண்டாம்" பல முறை தடுத்தனர். டாம் வீதிக்கு வந்த அவர் முச்சக்கர வண்டியொன்றை நிறுத்தி குறித்த லொட்ஜை நோக்கி போகிறார்.

பின்னால் அவரது பிரதான மெய்ப்பாது காவலர் குலாம் தலைமையில் பின்னால் வந்த ஆட்டோக்களில் ஏறி பின்னால் செல்கிறோம்.

லொட்ஜின் முன்னால் சேர் சென்ற ஆட்டோ நின்றது. பிஸ்டலை லோட் செய்து கொண்டு லொட்ஜினுள் நுழைகிறார். பின்னால் அவருக்கே தெரியாமல் மெய்ப்பாது காவலர்களும் நாங்களும் .

பின்னால் திரும்பிய இஸ்ஸதீன் சேர் "ஏன் வந்த நீங்க?"

"இல்ல சேர் புலிகள்..." மெய்ப்பாதுகாவலர்கள் இழுக்க…

"நீங்க வந்தா புலி என்னச் சுடமாட்டானா? அல்லாஹ்வத்தவிர என்ன யாராலாயும் காப்பாத்த ஏலா. போங்க" எனகூச்சல் போட்டுவிட்டு...

உள்ளே போனவர் போராளிகளை மீட்டுக்கொண்டு அலுவலகம் வந்தார்.

1989 ஜனாதிபதி தேர்தல்...

சிறிமா அம்மையாருக்கு மு.கா.வழங்கிய ஆதரவை விலக்கி இறுதி நேரத்தில் ரணசிங்க பிரேமதாசவை ஆதரித்த தேர்தல். வெற்றி வாய்ப்பு சிறிமாவுக்கே அதிகமிருந்த காலம்.

அன்று தேர்தல் நடக்கிறது..

வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம். சிலவேளை சிறிமா வென்று விட்டால்... என்கின்ற பதற்றம்... தலைவர் அஸ்ரப் எங்கோ யாருக்கும் தெரியாத ரகசிய இடத்தில்.. தலைவரின் இல்லத்திருந்த சகோதரர் ஹிஸ்புல்லாஹ் முதல் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சொல்லாமல் கொள்ளாமல் எங்கோ மறைந்து விட்டனர்.

டாம் வீதி தலையகத்தில் இஸ்ஸதீன் சேர் மாத்திரம். அவரோடு அடினுயேனும் இன்னும் சில காத்தான்குடி சகோதர்களும், பொறியியலாளர் மாஹீர் (லோயர் மர்சூக்கின் தம்பி) அன்சார் (அபூபக்கர் ஜே.பி.மருமகன்)

ஆறாவது மாடியிலிருந்து கீழே பார்த்தால் நூற்றுக்கணக்கில் அதிரடிப் படையினர் ஆயுதங்களுடன் கவச வாகனங்கள் சகிதம்... சிறிமாவென்றால் தலைமையகம் ஒரே குண்டில் தரை மட்டமாகலாம். அப்படியான பதற்றம்...

முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அடியேனுக்கோ அடி வயிறு அச்சம் காரணமாக கலங்குகிறது. இஸ்ஸதீன் சேரோ அவரது அறைக்குள் கொண்டக்கடலை அவித்து சாப்பிடுகிறார்.

சற்று நேரத்தில் நாம் இருந்த இடம் நோக்கி வந்த சேர் "என்ன பயமாரிக்கா பயமாருந்தா இந்தாரிக்கி பிஸ்டல் வந்தாசுடுங்க.. பிஸ்டலை எடுத்து என்னருகே வைத்தவர்.இது கடலை சாப்பிடுங்க ரிசல்ஸ்களை நோட் பண்ணுங்க..." என பிஸ்டலையும் கடலையையும் வைத்து விட்டுச் சென்றார்.

காலை விடிந்தது அல்லாஹ்வின் அருளால் பிரேமதாச வென்றார்..

இப்படி பல துணிசசல் மிக்க சம்பவங்கள்.

இஸ்ஸதீன் சேரை அடியேன் எப்போதுமே ஒரு குல்புதீன் ஹிக்மத்தியாராகவே அன்றும் இன்றும் பார்ப்பதுண்டு. எனது அரசியல் குருவாகவும், வழிகாட்டியாகவுமே இன்றும் பார்க்கிறேன்.

கடைசியாக 2015ல் நாங்கள் சகோதரர் ஹிஸ்புல்லாஹ்வுடன் இணைந்து மஹிந்த ராஜபக்ஷ அவர்களைஆதரித்தபோது. ஆறாம் குறிச்சியில் மௌலவி அப்துர் ரஊப் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்திற்காக ஏறாவூரில் வைபவமொன்றில் கலந்திருந்த இஸ்ஸதீன்சேரை அடியேன் அலைபேசியில் அழைத்தபோது உடனே வந்தார்.

அவரை விழிக்கும் போது "மிகப்பெரிய கவிஞர், தேசிய சாஹித்திய மண்டல விருது பெற்றவர்
...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -