மலையகத்தில் தொடர் மழை மக்களின் இயல்பு வாழ்;க்கை பாதிப்பு தொழில் துறைகள் வீழ்ச்சி.


ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
நாடடில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மத்திய மலை நாட்டில் கடந்த சில தினங்களான கடும் மழை பெய்துவருகிறது நேற்று இரவு முதல் அடை மழை பெய்து வருவதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
தொடர்ச்சியாக இன்று அதிகாலை முதல் கடும் காற்றுடன் மழை பெய்து வருவதனால் தேயிலை தொழில் ஈடுப்பட்டுள்ளவர்களின் வருகை மிகவும் குறைந்துள்ளன.இதனால் தேயிலை உற்பத்தி வீழ்ச்சி கண்டுள்ளன.
அத்தோடு மரக்கறி செய்கையில் ஈடுபடுபவர்கள் தொடர் மழை காரணமாக தங்களது தொழில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளன.இதனால் மரக்கறி உற்பத்தியும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.இதே போன்று கட்டட தொழில் ஈடுபடுபவர்கள் கடும் மழை காரணமாக தங்களது தொழில்களில் ஈடுபட முடியாத நிலையிலேயே உள்ளன.
நீரேந்தும் பிரதேசங்களுக்கு அதிக மழை வீழ்ச்சி கிடைத்துள்ளமையினால் காசல்ரி, மவுசாகலை, கெனியோன், லக்ஸபான நவலக்ஸபான, மேல் கொத்மலை, விமலசுரேந்திர பொல்பிட்டிய, உள்ளிட்ட நீர்தேக்கங்களில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாகவும் இந்த நீரினை பயன்படுத்தி உச்ச அளவில் மின் உற்பத்தி மேற்கொள்வதாக மின்சார சபை பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மழையுடன் பலத்த காற்றும் வீசுவதனால் மரங்கள் மற்றும் மண் மேடுகளுக்கு அருகாமையில் வசிப்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளன.
இன்றைய தினம் ஊரடங்கு சட்ட தளர்த்தப்பட்ட போதிலும் தொடர் மழை காரணமாக மலையக நகரங்கு மிகவும் குறைந்த அளவு பொது மக்களே வருகை தந்திருந்தனர்.இதனால் வர்த்தக நடவடிக்கைகள் பாதிப்புக்குள்ளாகியிருந்தன.

நுவரெலியா மவாட்டத்தில் தற்போது நிலவு சீரற்ற காலநிலை காரணமாக பல இடங்களுக்கு மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ன.எனவே ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா ஆகிய வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதே நேரம் அடிக்கடி குறித்த வீதிகளில் பனி மூட்டம் காணப்படுவதனால் வளைவுகள் நிறைந்த இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் பனி மூட்டம் காணப்படும் போது தங்களுக்கு உரித்தான பக்கத்தில் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்தவாறு பயனிப்பதன் மூலம் ஏற்படக்கூடிய வாகன விபத்துக்களை தவிர்த்துக்கொள்ளலாம் எனவும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
பல பகுதிகளில் அதிக மழை காரணமாக ஆறுகள் ஓடைகள் நீர்வீழ்ச்சிகள் ஆகியன பெருக்கெடுத்துள்ளன எனவே அவற்றிக்கு சமீபமாக வாழ்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -