வவுனியாவில் மரக்கறி,பழவகை வியாபாரம் தொடர்பாக கமநல அபிவிருத்தி விடுத்துள்ள அறிவிப்பு!

வுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் ஊரடங்கு நேரத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கான மரக்கறி மற்றும் பழவகைகளின் மொத்த மற்றும் சில்லறை கொள்வனவு விற்பனை சந்தைபடுத்தல் தொடர்பாக விடுக்கபட்டுள்ள அறிவித்தல்-02.05.2020

வவுனியாவில் ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் மரக்கறிகளை வீடுகளில் இருந்தபடியே கொள்வனவு செய்யக்கூடிய வகையில் உள்ளூர்களில் வீடுகளுக்கு நேரடியாக மரக்கறி வியாபாரம் மேற்கொள்ளுவதற்காக வியாபாரிகள் ஒழுங்குபடுத்தபட்டுள்ளனர். அவர்களது விபரங்கள்

அதேபோன்று விவசாயிகளிடம் இருந்து பிற மாவட்டங்களுக்கு மரக்கறி பழவகைகளை கொள்வனவு செய்து கொண்டு செல்வதற்கானவசதிகளும்ஏற்படுத்தபட்டுள்ளன.பிற மாவட்டங்களுக்கு பொருட்களை சந்தைபடுத்த விரும்பும் விவசாயிகளின் நலன்கருதி பொருட்கள் சந்தைபடுத்தும் இடங்கள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு அனுமதிக்கபட்ட வாகனங்கள் தொடர்பான விபரங்கள் இணைக்கபட்டுள்ளன.

அதேபோன்று வெளிமாவட்டங்களுக்கு பப்பாசி பழங்களை கொண்டு செல்வதற்கும் வசதிகள் ஏற்படுத்தபட்டுள்ளன.

ரெட்லேடி பப்பாசி பழத்த்திற்கான ஆகக்குறைந்த கொள்வனவு விலை கிலோ ரூபாய் 20 /= ஆகும். கிலோ ரூபாய் 20 /=க்கு குறைந்த விலையில் கொள்வனவு செய்யும் வியாபாரிகள் தொடர்பான முறைபாடுகள் கிடைக்குமிடத்து ஊரங்கு நேர போக்குவரத்து அனுமதி செல்லுபடியற்றதாக்கப்படும்.

மேலும் வீடுகளுக்கு நேரடியாக பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் கூடிய விலைகளில் விற்பனை செய்வது தொடர்பாக கிடைக்கபெறும் முறைப்பாடுகளின் அடிப்படையில் ஊரடங்கு நேர வியாபார அனுமதி செல்லுபடியற்றதாக்கப்படும்.

முறைபாடுகளுக்க்கான தொலைபேசி இலக்கம்

024-2225511
தகவல்
கமநல அபிவிருத்தி திணைக்களம்
வவுனியா




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -