நாட்டில் ஏற்பட்டுள்ள கொரணா வைரஸ் தொற்றிலிருந்து நாட்டு மக்கள் அனைவரையும் பாதுகாக்கும் நோக்கில் அரசினால் அமுல் படுத்தப்பட்டுவரும் ஊடரங்கு நிலமையை கருத்திற் கொண்டு கடந்த ஒரு மாதகாலமாக மூடப்பட்டு உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்த கல்லோயா பிளாண்டேஸன் தனியார் நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டுவரும் ஹிங்குரான சீனித் தொழிற்சாலையில் சீனி உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் ஹிங்குரானயிலும் திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் ஆகிய இரு இடங்களிலும் சீனித் தொழிற்சாலைகள் காணப்படுகின்றன. இருந்தும் கடந்த பல வருடங்களாக கந்தளாய் சீனித் தொழிற்சாலை மூடப்பட்டு தொழிற்சாலை வளாகம் புற்கள் , புதர்கள் மற்றும் பாரிய மரங்கள் வளர்ந்து காடாக காட்சியளிப்பதுடன் இயந்திரங்களும் வாகனங்களும் துருப்பிடித்து பயன்படுத்த முடியாத நிலையிலும் உள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட கடந்த ஒரு வார காலத்தில் ஹிங்குரான சீனிற்தொழிற்சாலை மூலமாக 30000 மெற்றிக் தொன் சீனி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தொழிற்சாலையின் பிரதான செயற்பாட்டு முகாமையாளர் சுராத் நந்தித பெரேரா தெரிவித்தார்.
சீனித்தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டமையால் தொழிற்சாலையில் தொழில் புரியும் உத்தயோஸ்தர்களும் ஊழியர்களும் தொழிலின்றி இருந்ததுடன் தொழிற்சாலையை நம்பி ஹிங்குரான பிரதேசத்தல் கரும்புச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளும் பாதிப்புக்குள்ளாகும் நிலமையொன்றி ஏற்பட்டதன் காரணமாகவும் நாட்டில் சீனிக்கு பலத்த தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற காரணத்தினாலும் மீண்டும் தொழற்சாலையை இயங்க வைக்க தீர்மானித்ததாகவும் சுராத் நந்தித பெரேரா மேலும் தெரிவித்தார்.
இந்த சீனித் தொழிற்சாலை 1960 முதல் 1966 வரை கல்லோயா சீனி கூட்டுத்தாபனம் எனவும் , 1966 முதல் 1991 வரை ஸ்ரீலங்கா சீனிக் கூட்டுத்தாபனம் எனவும் , 1991 முதல் 1992 வரை ஹிங்குரான சீனி கம்பனி எனவும் , 1992 முதல் 1997 வரை ஹிங்குரான சீனி தொழிற்சாலை எனவும் , 1997 முதல் 2007 வரை ஹிங்குரான அரச சீனி தொழிற்சாலை எனவும் 2007 முதல் இன்று வரை கல்லோயா பினாண்டேஸன் சீனித் தொழற்சாலை எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்க விிடயமாகும்.