கொழும்பில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஜனனம் அறக்கட்டளை களத்தில்...!


றிஸ்கான் முகம்மட்-
னகன் விநாயகமூர்த்தி அவர்களின் முன்னெடுப்பில் ஜனனம் அறக்கட்டளையானது கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் திட்டத்தினை முற்றிலும் இலவசமாக ஆரம்பித்து உள்ளது. 

இத்திட்டமே தனியார் அமைப்பு ஒன்றால் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொற்று நீக்கும் திட்டமாகும். 

தொற்று மேலும் பரவுவதை தடுக்க இதுவரை 35 தொடர்மாடி குடியிருப்புகளில் கிருமிநாசினி மருந்தை தெளிக்கும் பணி வெற்றிகரமாக நடாத்தப்பட்டள்ளது. இத்திட்டத்தில் 500 அதிகமான தொடர்மாடி குடியிருப்பு தொகுதிகளும் மற்றும் கொழும்பில் பரந்துள்ள தோட்டங்களும் உள்வாங்கப்பட உள்ளது.

விண்ணப்பங்கள் வழங்கப்பட்ட குடியிருப்பாளர்களின் விருப்பம் உறுதிப்படுத்தப்பட்ட தொடர்மாடி குடியிருப்புக்கள் மற்றும் தோட்டங்களுக்கு இந்த திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என் ஜனகன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். 

மேலும் அவர் குறிப்பிடும்போது, கொழும்பில் உள்ள பல தொடர்மாடி கட்டடங்களில் வாழும் மக்கள் இந்த கிருமித் தொற்று அகற்றும் நடைமுறையை இதுவரையும் தங்கள் கட்டடங்களில் உள்ள பொதுப்பாயன்பாட்டு பகுதியில் முறைப்படி ஆரம்பிக்காது இருக்கிறார்கள்.

 இந்த செயற்பாடு கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என்ற எண்ணத்தினை அவர்களுக்கு தூண்டும், அதனால் அவர்களும் இதனை தொடர்ந்து செயற்படுத்துவார்கள் என்ற எண்ணத்தில் இத் திட்டத்தினை தொடர்மாடிகளில் இருந்து செயற்படுத்துகின்றோம் என்றார்.

மேலும் ஜனனம் அறக்கட்டளையானது நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட நாட்கூலி பெறும் 9,000 அதிகமான குடும்பங்களுக்கு உலர் உணர்வுகளை வழங்கியுள்ளது. இந்த திட்டத்தினை ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இரண்டாம் நாளில் இருந்தே ஆரம்பித்து தொடர்ந்து செய்து வருவதாக ஜனகன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -