எதிர் வரும் காலங்கள் மிக மோசமாக இருக்கும்,வீட்டுத் தோட்டங்களை உருவாக்கி உணவுப் பயிர்களை நாமே பயிரிடுவோம்.


கிழக்கு மாகாண விவசாய பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.குசைன்

ஹஸ்பர் ஏ ஹலீம்-
லக ஆராய்ச்சிகள் தற்போது கூறிவருகின்ற நிலையில் எதிர்வரும் காலம் மோசமாக இருக்கும் இதனை கருத்திற் கொண்டு நாமே வீட்டுத் தோட்டங்களை அரச கொள்கையின் பிரகாரம் உருவாக்குவோம் என கிழக்கு மாகாண விவசாய பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.குஸைன் தெரிவித்தார்.

அரசினால் நடை முறைப்படுத்தப்பட்டு வரும் பத்து இலட்சம் வீட்டுத் தோட்டங்களை உருவாக்குதல் "சௌபாக்கிய" எனும் வேலைத் திட்டம் நிகழ்வு நேற்று (14)திருகோணமலை,கப்பல் துறை பகுதியில் இடம் பெற்ற விவசாயிகளுக்கான விதைகள்,கன்றுகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில்
நமது இறுப்பை மீள பரிசோதிக்கக் கூடிய கால கட்டம் இது இதில் உணவுப் பாதுகாப்பு முக்கியமாக காணப்படுகிறது இலங்கையி சில முக்கிய உணவுகளை வெளிநாடுகளை நம்பி இருந்தது ஆனால் அந்த நிலைமை தற்போது மாறியுள்ளது இனி வெளிநாடுகளை நம்ப முடியாது நாமே வீட்டுத் தோட்டங்களை உருவாக்கி நாமே பயிரிட வேண்டும் என்றும் விவசாயிகளிடத்தில் கேட்டுக் கொண்டார்.
அரசினால் தானியப் பயிர்களாக சோளம்,மிளகாய்,வெங்காயம் ,நிலக்கடலைகளை வெளிநாட்டில் இறக்குமதி செய்தது தற்போது ஜனாதிபதியின் அவசர உணவுப் பாதுகாப்பு கொள்கையின் பிரகாரமாக வீடுகளில் வீட்டுத் தோட்டங்கள் ஊடாக அதனை உருவாக்க விதைகள்,கன்றுகளை விவசாய திணைக்களம் ஊடாக விநியோகித்து வருகிறோம் நெல்லுக்கான உத்தரவாத விலை போன்று பயிர்களுக்கான உத்தரவாத விலை ஊடாக கொள்வனவு முறைகள் உள்ளது.
14 வகையான பயிரினங்கள் தற்போது வழங்கப்படுகிறது இதனை கருத்திற் கொண்டு அவசர உணவு உற்பத்தி தேவைகளை அரசாங்கம் வலியுறுத்துகிறது.
கால நேரங்களை வீணாடிக்காமல் உணவு உற்பத்திகளில் விவசாயிகள் ஈடுபட வேண்டும் இதற்கான உள்ளீடுகளை வழங்குவோம். கிழக்கில் திருகோணமலையில் வெங்காய செய்கை ஊடாக வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டும் வருகிறது வாழ்க்கையின் முறைகளை மாற்றி உணவு உற்பத்திகளை ஏற்படுத்தி மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -