கொரோனா வைரஸ் வுஹான் ஆய்வுக் கூடத்திலிருந்து வந்ததற்கு ஆதாரம் இருக்கிறது - அமெரிக்க வெளியுறவுச் செயலாளர்!




ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
கொரோனா வைரஸ், சீனாவின் வுஹான் நகர கடலுனவு மார்க்கெட்டிலிருந்து வெளவ்வாலிடமிருந்து மனிதர்களுக்கு பரவியதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. அதைத் தொடர்ந்து அந்த மார்க்கெட் மூடப்பட்டது. ஆனால் அந்த வைரஸ், இயற்கையாக உருவானது அல்ல, அது வுஹான் நகரத்திலுள்ள வைரலாஜி இன்ஸ்டிடியூட்டின் ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டது, அங்கிருந்து கசிந்துதான் பரவியிருக்கிறது என்று பொக்ஸ் நியூஸ் TV செய்தி வெளியிட்டது.

அதைத் தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தப்படுமென்றும், அத்துடன் அந்த ஆய்வுக்கூடத்துக்கு அளித்து வந்த நிதியுதவியையும் அமெரிக்கா ஜனாதிபதி அதிரடியாக நிறுத்தினார். ஆனால் இந்த வைரஸ், வுஹான் வைரலாஜி இன்ஸ்டிடியூட்டில் உருவாக்கப்பட்டது என்பதற்கான ஆதாரம் எதையும் அமெரிக்கா தரவில்லை, தந்தால் வரவேற்போம் என்று உலக சுகாதார ஸ்தாபனம் கூறியது. ஆனால் வுஹான் வைரலாஜி இன்ஸ்டிடியுயூட்டில்தான் கொரோனா வைரஸ் உருவானது என்ற நிலைப்பாட்டில் அமெரிக்கா உறுதியாகவே உள்ளது.

இதையொட்டி பொக்ஸ் நியூஸ் TVக்கு அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ ( Mike Pompeo ) அளித்த சிறப்பு பேட்டியின்போது கூறியதாவது:-
கொரோனா வைரஸால் 76 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் இறந்து விட்டனர். 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் இப்போது நடந்திருப்பது, இங்கு நடந்திருக்கக் கூடாதது. கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் நகரத்திலிருந்து வந்தது தான் என்பது எங்களுக்கு தெரியும். இது குறித்து சீனர்களுக்கு குறைந்தபட்சம் Decemberயில்
தெரிந்துவிட்டது. ஆனால் சீனா போதுமான அளவுக்கு இதில் சிறப்பாக செயல்படவில்லை. உலக சுகாதார ஸ்தாபனமும் சீனாவின் தூண்டுதலின் பேரால், அதை உலகளாவிய தொற்றுநோய் என உரிய நேரத்தில் அறிவிக்கவில்லை.

கொரோனா வைரஸ் விடயத்தில் சிக்கலை உருவாக்கிய விஷயங்கள் இவைகள்தான். இன்றும்கூட, நான் இங்கு அமர்ந்திருக்கும்போது, இந்த பேட்டியை காண்கிறபோது, நமக்கு தேவையான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த ஆய்வுக்கூடங்களை பார்ப்பதற்கு மேற்கத்தியர்களை அனுமதிக்க வேண்டும் என்று நாங்கள் இன்னும் சீனாவிடம் தொடர்ந்து வேண்டுகிறோம். இந்த நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவதற்கும், இதுபோன்று இனி நடக்காதவாறு தடுப்பதற்கும் எங்களுக்கு தகவல்கள் தேவை.
கொரோனா வைரஸ், வுஹான் ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் வெளிப்பட்டது என்பதை நம்பிக்கையுடன் அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாகம் அறிந்துள்ளது. இது தொடர்பாக நாங்கள் சேகரித்த உளவுத் தகவல்கள் குறித்து இப்போது எதுவும் கூற இயலாது. ஆனால் இது தொடர்பாக நாங்கள் உளவுத்தகவல்கள் சேகரித்து இருக்கிறோம். இதில் நாங்கள் நம்பிக்கையும் வைத்துள்ளோம்.
கொரோனா வைரஸ்,வுஹான் வைரலாஜி இன்ஸ்டிடியூட்டின் ஆய்வு கூடத்திலிருந்து வந்ததுதான் என்பதற்கான ஆதாரங்களை நான் பார்த்தேன். இதை மறுப்பதற்கான ஆதாரம் கிடைத்தாலும் அதைப் பார்ப்பதில் மகிழ்ச்சிதான். நாங்கள் அதன் அடிவரையில் செல்ல விரும்புகிறோம். அதனால்தான் இது தொடர்பான தகவல்களை மேற்கத்தவர்களுக்கு தர வேண்டும் என்று பல மாதங்களாக கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
அமெரிக்க பத்திரிகையாளர்களை சீனா என்ன செய்தது என்பதை சர்வதேச சமூகம் பார்த்தது. கொரோனா வைரஸ் குறித்து ஆரம்பத்தில் எச்சரித்த வைத்தியர்களை சீனா என்ன செய்தது என்பதையும் நாம் பார்த்தோம். அவர்கள் மீண்டும் காணப்படாத வகையில், அலைந்து திரிந்ததை நாங்கள் கண்டோம். இந்த வகையான நடத்தையை சீன கம்யூனிஸ்ட் கட்சி போன்ற சர்வாதிகார ஆட்சியின் போதுதான் பார்த்திருக்கிறோம். அவர்கள் மறைக்கிறார்கள். தவறான தகவல்களை பிரசாரமாக செய்கிறார்கள். இதில் அமெரிக்காவை சீனா பொருத்த முயன்றதை நாம் பார்த்தோம். இது போன்றே ஆட்சி செய்கிறார்கள். அதனால்தான் ஜனநாயகங்கள் செழித்தன.
சர்வாதிகார ஆட்சிகள் தங்கள் சொந்த நாட்டு மக்களையே கொல்கின்றன. சீனாவிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். உலக சுகாதார ஸ்தாபனம் இதில் தோல்வி கண்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்தை மதிப்பீடு செய்ய முயற்சிக்கிறோம்.
இவ் விவகாரத்தில் உலக சுகாதார ஸ்தாபனம் சரியான முடிவை வழங்காதபோது, அந்த அமைப்புக்கு பல பில்லியன் பணத்தை அமெரிக்கா வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. உலகளாவிய சுகாதார கொள்கையில் உலக சுகாதார ஸ்தாபனம் முன்னணியில் இருக்க நல்ல வழியை கண்டுபிடிப்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது என கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -