வீட்டிலிருந்து கொண்டாடுவோம் ! எஹியாகான் பெருநாள் வாழ்த்து


மது வாழ்வில் - நாம் ஒருபோதுமே சந்தித்திராத பெருநாள் தினமொன்றை இன்று எதிர்கொண்டுள்ளோம். இத்தினத்தில் வீட்டிலிருந்து அமைதியாக இப் பெருநாளை கொண்டாடுவோம் என முகாவின் தேசிய பிரதி பொருளாளர் எ.சி.எஹியாகான் விடுத்துள்ள நோன்பு பெருநாள் வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லீம்கள் நிம்மதியாக வாழும்
சூழ்நிலை உருவாகவும் இப்புனித
நாளில் பிரார்திப்போம என்றும் எஹியாகான் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பிட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக - புனித ரமழான் மாதத்தில் - அசௌகரியங்கள் பலதை நாம் சந்தித்து வருகின்றோம்.இம்முறை கண்ணுக்குப் புலப்படாத கொரோனா எம்மை ஆட்கொண்டுள்ளது. மட்டுமல்லாது , எமது உறவுகளும் எரிக்கப்பட்டு - எமது மார்க்க அடிப்படையில் கைவைக்கப்பட்டு பெரும் வேதனையில் இன்றைய நாளை எதிர்கொண்டுள்ளோம்.
முப்பது நாட்களாக
நோன்பு நோற்று அல்லாஹ்வின்
திருப்பொருத்தத்தைப் பெற்ற நாம் - நமது சமுகத்திற்கு எதிரான அட்டூழியங்கள் மங்கி மறைய - இக்கால கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வணக்க வழிபாடுகளில் இரு கரமேந்தினோம். அந்த பிரார்த்தனைகள் நிச்சயமாக - இன்ஷா அல்லாஹ் வீண் போகாது .
எனவே நோன்புப் பெருநாளைக்
கொண்டாடும் இலங்கை வாழ்
முஸ்லிம்கள் மட்டுமன்றி உலகிலுள்ள
முஸ்லிம்களும் முஸ்லிம்கள்
சிறுபான்மையினராக வாழும்
நாடுகளிலுள்ள எமது உறவுகள்
அனுபவிக்கும் அனைத்து
துயரங்களும்
அகதி வாழ்க்கை முறையும்
ஒழிந்து கௌரவமிக்க நிம்மதியான
வாழ்க்கைப் பயணம் அமைய இந்நாளில்
இறைவனிடம் மன்றாட்டமாக துஆ
செய்வோம்.
புனித நோன்புப்
பெருநாளை கொண்டாடும்
அனைத்து முஸ்லிம்களுக்கும்;
எனதும் எனது கட்சியின்
சார்பாகவும் மீண்டும் வாழ்த்துக்களைக்
கூறிக்கொள்கிறேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -