சாய்ந்தமருது நீர்த்தாங்கியின் படுகொலைக்கு பதில் சொல்லப்போவது அதிகாரிகளா? அரசியல்வாதிகள


எம்.எப்.ஏ. பாஸித்-
சாய்ந்தமருது பிரதேசத்தில் நீண்டகாலமாக குடிநீர் விநியோகமானது முன்னறிவித்தல் இன்றி தொடர்ச்சியாக தடைப்பட்டுவருகின்றது.
குறிப்பாக இந்த ரமழான் மற்றும் இன்றைய பெருநாள் தினத்தில் கூட இந்நிலைமையே தொடர்கிறது.

இது தொடர்பில், சாய்ந்தமருது நீர்த்தாங்கியில் ஏற்பட்டுள்ள பழுது ஒன்றின் காரணமாக கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நீர் நிரப்பப் படாமல் காணப்படுவதாகவும், இதனால் அயல் கிராமம் ஒன்றின் நீர்த்தாங்கியினூடாக தற்காலிக நீர் வினியோகம்
இடம்பெறுவதனாலேயே குறித்த நீர் விநியோகத் தடை ஏற்பட்டு வருவதாகவும் அறியமுடிகிறது.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஊடாக முன்னர் குடிநீர் விநியோகத்திற்கு முக்கியத்துவம் வழங்கி நீர் வழங்கப்பட்டதாகவும், அப்போது இந்த பிரச்சினை பெரிதாகத் தெரியவில்லை என்றும், இப்போது விவசாயத்துக்கு முன்னுரிமை வழங்கப்படுவதால் குடிநீர் விநியோகத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.
மேலும், இந்த நீர்த்தாங்கி ஆனது தொடர்ந்தும் இவ்வாறு நீர் நிரப்பப்படாமல் இருக்குமாக இருந்தால், அந்த நீர்த்தாங்கியானது முற்றாக சேதமடைந்து பின்னர் நீர் நிரப்பவே முடியாத நிலைக்கு சென்று விடக்கூடும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் ஊடாக அறியவருகின்றது.
அதிகரித்த சன நெரிசல் காரணமாக சாய்ந்தமருது பிரதேசத்தின் நிலக்கீழ் நீரானது மாசுபட்ட நிலையில், இந்த நீர்த்தாங்கி அமையப்பெற்றதானது ஒரு வரப்பிரசாதமே, சாய்ந்தமருது பகுதியின் சனப் பரம்பலானது நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில், இவ்வாறானதொரு அரிய வளத்தை நாம் இழந்து நிற்பதானது துரதிர்ஷ்டமே.
மக்களின் பயன்பாட்டுக்காக நிறுவப்பட்டு வானளாவ உயர்ந்து கம்பீரமாகக் காட்சி தரும் இந்த நீர்த்தாங்கியானது நம் கண் முன்னே நாளுக்கு நாள் செத்துக் கொண்டிருக்கின்றது.

இந்தப் படுகொலைக்கு பதில் சொல்லப்போவது அதிகாரிகளா? அல்லது அரசியல்வாதிகளா?
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -