நுவரெலியா தொகுதி அபிவிருத்தி மேம்பாட்டுக்கு தேசியகட்சியில் தமிழர் பிரதிநிதித்துவம் அவசியம்


ஐ.தே.கட்சி வேட்பாளர் திருச்செல்வம் வலியுறுத்து


'நுவரெலியா மாவட்டத்தில் அபிவிருத்தி முன்னெடுப்புகளில் தமிழ் மக்கள்வாழும் பிரதேசங்கள் காலங்காலமாக புறந்தள்ளப்படும் நிலைமை காணப்படுகின்றது. இந்த நிலையை மாற்றி அமைத்து அனைத்து அபிவிருத்தி திட்டங்களும் நமக்கு முற்று முழுதாக கிடைக்க வேண்டிய நிலைமையை ஏற்படுத்த, தேசிய கட்சியில் தமிழர் பிரதிநிதித்துவத்தை நிலைபெறச் செய்யவேண்டும் இதற்கு மக்கள் இம்முறை முன்வரவேண்டும்.'

இவ்வாறு வலியுறுத்துகிறார் நுவரேலியா தொகுதிக்கான ஐ.தே.கட்சியின் அறிமுகவேட்பாளர் திருச்செல்வம்

இது குறித்த அவரது செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது:-

கடந்த கால வரலாற்றில் நுவரெலியா தொகுதி, தொழிற்சங்க அரசியல் கட்சிக ளின் தமிழர் பிரதிநிதித்துவங்களையே கொண்டிருந்தது. இதன் காரணமாகவே என்னவோ தொகுதிக்கான அபிவிருத்தி திட்டங்கள் பலவும் தமிழ் மக்களுக்கு உரிய முறையில் கிடைக்க முடியாத நிலைமைகள் இருந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

தேசியரீதியான நடவடிக்கைகளில் நுவரெலியா தொகுதிவாழ் தமிழ் மக்கள் தம்மை இணைத்துக்கொள்ளத் தவறியுள்ளனர். வெறுமனே தொழிற்சங்க நடவடிக்கைகளுக் குள் மட்டுமே தம்மை மட்டுப்படுத்திக் கொள்ளும் நிலைமைகளே கடந்த கால தமிழ் பிரதிநிதித்துவங்களால் வழிநடத்தப்பட்டு வந்திருக்கின்றன. இந்த நிலையை மாற்றி அமைக்க வேண்டியது காலத்தின் அவசியமாகும்.

மலையக மக்களைப் பொறுத்தவரையில் அவர்களது மேன்மைக்கும் வாழ்வுக்கும் இடைவிடாது பெரும் பணியாற்றி ஒரு கட்சியாக ஐக்கிய தேசிய கட்சி மட்டுமே இருந்து வருகின்றது.

கடந்த கால வரலாற்றை புரட்டி பார்த்தால் ஐ.தே.க அரசாங்கத்தின் மூலமே மறுக்கப்பட்ட - பறிக்கப்பட்ட உரிமைகள் மீளக் கிடைக்கப்பெற்றன. நமது பெரும் தலைமை கூட ஐக்கிய தேசிய கட்சியை முழுமையாக நம்பி செயற்பட்ட காரணத் தினாலே ஒருசில மைல்கற்களை தொட்டது. இந்த வரலாற்று அடிசுவட்டைப் பின்பற்றியே தற்போதைய தலைமைகளும் செயற்பட்டன. எனினும் அவர்களால் ஆரோக்கியமான நகர்வுகளை மேற்கொள்ள முடியாத நிலைமைகள் இருந்தன இதற்கொரு பிரதான காரணியாக தொழிற்சங்க அரசியல் இருந்தமையை நம்மால் அவதானிக்க முடிகின்றது.
இந்நிலை தொடருமானால் நமது சமூகம் தொடர்ந்தும் பின்தங்கும் நிலைமைகளே ஏற்படும். எனவோ நாம் எமது செயற்பாடுகளை தேசிய கட்சியுடன் இணைந்து முன்னெடுக்க வேண்டியது அவசியமானதாக இருக்கின்றது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டம் ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாக தமிழ் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கான சந்தர்ப்பம் என் மூலமாக உங்களிடம் முன் வைக்கப்பட்டுள்ளது என்பதை இச் சந்தர்ப்பத்தில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சிஅடைகிறேன்- என்றுள்ளது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -