அம்பாறை மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை; மரங்கள் முறிந்து விழுந்ததில் சேதம்; இரவு வேளையில் கிணற்று நீர் வற்றுவதாகவும் பொதுமக்கள் மத்தியில் பீதி


ஏ.எல்.எம்.ஷினாஸ்-
ம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் (15) நேற்று மாலை பலத்த காற்றுடன் கடும் மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் அன்றாட இயுல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது. சில பகுதிகளில் கடும் காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்துள்ளது. இதனால் சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

பெரியநீலாவணை, மருதமுனை பகுதியில் வீதியின் அருகே நின்ற மரம் திடீரெண முறிந்து விழுந்ததால் வீதிப் போக்குவரத்து தடைப்பட்டதுடன் மின் கம்பங்கம்பங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

கடந்த நான்கு ஐந்து நாட்களாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் இப்பகுதியில் மீனவர்கள் கடலுக்கு செல்லமுடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் கிணற்று நீர் வற்றுவதாக ஒரு சிலரால் தெரிவிக்கப்பட்டதை அடுத்து நேற்று (15) நள்ளிரவு வேளையில் பொதுமக்கள் அச்சத்துடன் வீதிகளுக்கு வந்தனர். மக்கள் பீதியடைந்ததுடன் நீர் வற்றிய கிணறுகளையும் தேட ஆரம்பித்தனர். இதனையடுத்து பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் அணர்ந்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தினார்கள்.

காலநிலை மாற்றத்தால் இவ்வாறு ஒரு சில பகுதிகளில் நீர் வற்றுவது வழமையான ஒரு விடயமாகும். பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸ் தெரிவித்தார்.
இந்த தகவல்களை அடுத்து பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட அச்சம் தணிந்து மீண்டும் வீடுகளுக்கு சென்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -