கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல்.



எஸ்.எம்.எம்.முர்ஷித்-

நாட்டில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ள நிலையில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் இன்று சனிக்கிழமை பாதுகாப்பு சம்பந்தமாக மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் வழங்கப்பட்டது.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாழும் பொதுமக்களி;ன் பாதுகாப்பு கருதி, மக்கள் சுகாதார முறைப்படி வெளியில் எவ்வாறு செல்வது தொடர்பில் அறிவித்தல் வழங்கப்பட்டு வருகின்றது.

நாட்டில் கொரோணா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த புதன்கிழமை இரவு அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டமானது எதிர்வரும் திங்கட்கிழமை தளர்த்தப்படவுள்ள நிலையில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் குறித்த ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.

இதன்போது வெளியில் செல்லும் மக்கள் கைகளை சவர்காரம் இட்டு நன்றான கழுவ வேண்டும், முகக் கவசம் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும். அத்தோடு வியாபார நிலையங்களின் ஒரு மீற்றர் இடைவெளியில் நின்று பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும்.

தற்போது நோன்பு பெருநாள் வரவுள்ளமையால் மக்கள் ஆடை வியாபார நிலையங்களுக்கு குடும்பத்துடன் செல்லாமல் குடும்பத்தில் ஒருவர் மாத்திரம் சென்று உடைகளை கொள்வனவு செய்ய வேண்டும். அத்தோடு பெருநாளினை வீட்டில் இருந்தவாறு கொண்டாட வேண்டும். சலூனுக்கு செல்பவர்கள் முடிகளை மாத்திரம் வெட்ட வேண்டும், முகச்சவரம் செய்ய முடியாது என்றும் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் மக்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -