வரி அறவிடப்படுவதனை அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக திசை திருப்புவது கவலைக்குரியது -கல்முனை மேயர் ரகீப்

எம்.ஐ.எம்.அஸ்ஹர் , எம்.எம்.ஜெஸ்மின , ஏ.பி.எம்.அஸ்ஹர்,அஸ்லம் எஸ்.மௌலானா-
ல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் பொது மக்களின் திண்மக்கழிவகற்றலை இலகுபடுத்தும் வகையிலேயே மக்களிடமிருந்து முகாமைத்துவ வரி அறவிடப்படுவதனை அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக புதாகரமாக மாற்றி பொது மக்களிடையே குழப்பத்தை உண்டு பண்ண சிலர் முயற்சிப்பது மிகவும் கவலையாக உள்ளது.

இவ்வாறு கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் திண்மக்கழிவகற்றல் செய்பாடுகளை முன்னெடுச் செல்வதற்காக கல்முனை மாநகரசபையால் குப்பை வரியாக ஒரு வீட்டுக்கு வாரதிற்கு 50 ரூபா அறவிடுதல் சம்பந்தமாக பொது மக்கள் மத்தியில் எற்பட்டுள்ள குழப்ப நிலமையினை தெளிவு படுத்தும் வகையில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் பத்திரிகையாளர் மாநாடொன்று மாநகரசபை கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றபோது கல்முனை மாநகர சபை மேயர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ,

கல்முனை மாநகர சபை எல்லைக்குள் கல்முனை , கல்முனைக்குடி ,சாய்ந்தமருது ,மருதமுனை , பாண்டிருப்பு , நற்பிட்டிமுனை , சேனைக்குடியிருப்பு போன்ற பல பெரிய தமிழ் ,முஸ்லிம் கிராமங்கள் உள்ளடங்குகின்றன.இந்த கிராமங்களில் நாளுக்கு நாள் சனத்தொகை அதிகரித்த வண்ணம் உள்ளது. 

இதற்கேற்ப திண்ம கழிவகற்றல் முறையில் மாற்றம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதற்கான முழுச் சுமையையும் மாநகர சபையினால் முன்னேடுத்துச் செல்ல முடியாதுள்ளது. மாநகர சபைக்கு ஒதுக்கப்படும் நிதியில் சுமார் 80 வீதம் திண்ம கழிவகற்றலுக்காக செலவிட வேண்டியுள்ளது. அதனால் ஏனைய மக்கள் நலன் சேவைகளை முன்னனெடுத்துச் செல்ல முடியாதுள்ளது. இதற்காக மக்களின் நன்மை கருதி திண்ம கழிவகற்றலை சிரமமாக மேற்கொள்ளுவதற்காக மக்களிடமிருந்து குப்பை வரியினை அறவிடவேண்டியுள்ளது.

கல்முனை மாநகர சபை எல்லைக்குள் சுமார் 1,20,000 மக்கள் வாழ்கின்றனர். கல்முனை நகருக்கு பல இடங்களில் இருந்தும் பல்வேறு தேவைகள் நிமிர்த்தம் சுமார் 30,000 பேர் தினசரி வருகை தருகின்றனர்.ஒவ்வொருவரும் தினசரி திண்ம கழிவாக 700 கிராம் குப்பைகளை சூழலுக்கு சேர்க்கின்றனர். இதன்படி கல்முனை மாநகர சபை எல்லைக்குள் தினசரி 150 தொன் திண்ம கழிவுகள் சேர்கின்றது.இந்த திண்ம கழிவுகளை கூலி ஆட்களைக் கொண்டு தரம் பிரித்து சுமார் 56 கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பாலுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பள்ளக்காட்டில் கொட்ட வேண்டியுள்ளது. இதற்காக அட்டானைச் சேனை பிரதேச செயலகத்திற்கு மாதாந்தம் இலட்சக்கணக்கான பணம் செலுத்தவும் வேண்டியுள்ளது. 

இச் செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்ல பெருமளவில் ஆளணியினர் தேவைப்படுகின்றர். இவ்வாறு மாநகரசபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் சேரும் திண்ம கழிவுகளை அகற்ற தினசரி 4,35,000 ரூபா செலவாகின்றது. இது ஒரு மாதமாகும் போது 1 கோடியே 30 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா ஆகின்றது.இந்த நிலமையை மக்கள் செலுத்தும் சோலை வரியினைக் கொண்டு நிவர்த்தி செய்ய முடியாது. 

எனவே மாநகரசபைக்கென வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமையவே 1952 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியில் துணை விதியில் குறிப்பிட்ட” வறுமை காரணமாக சபையினால் விலக்களிக்கப்பட்ட இருப்பாட்சியாளர் தவிர்ந்த கழிவகற்றல் சேவையை கொண்டுள்ள வளவுகளின் இருப்பாளர் சபையினால் அதன் சார்பில் விதித்துரைக்கப்படக்கூடியவாறான வரி வீதத்தினை சபைக்கு மாதாந்தம் செலுத்த வேண்டும்.” என்ற குறிப்பிற்கு அமைவாகவே இந்த கழிவகற்றல் முகாமைத்துவ வரி அறவிடப்படுகின்றது.என தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -