அரசாங்கத்தின் 'சௌபாக்யா' 10லட்சம் வீட்டுத்தோட்டங்களை உருவாக்கும் வேலைத்திட்டத்தின்கீழ் பாலமுனை விவசாயவிஸ்தரிப்பு நிலையத்தினுடாக மரக்கறிப்பயிர் விதைகள் வழங்கப்பட்டன.
பாலமுனை விவசாயவிஸ்தரிப்பு நிலைய தலைமை விவசாயப்போதனாசிரியர் இராஜநாயகம் விஜயராகவன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாலமுனை ஒலுவில் தீகவாபி போன்ற பிரதேச விவசாயிகளுக்கு பயிர்விதைகள் வழங்கிவைக்கப்பட்டன.
மிளகாய் கத்தரி வெண்டி பயற்றை கீரை போன்ற பயிர்விதைகள் வழங்கப்பட்ட இந்நிகழ்வில் பாடவிதான உத்தியோகத்தர் ஏ.ஜ.ஏ.பெரோஸ் தொழினுட்ப உத்தியோகத்தர் வி.நிருசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இவ்வேலைத்திட்டத்தினுடாக பயிப்பாதுகாப்பை உறுதிசெய்வதுடன் எதிர்கால உணவுத்தேவையை பூர்த்தி செய்வதும் நோக்கமாகும் என விவசாயப்போதனாசிரியர் இ.விஜயராகவன் அங்கு தெரிவித்தார்.
மேலும் வயல்வரம்புகளில் நடுவதற்கான மரக்கறி விதைகளை கமக்காரர்களுக்கு வழங்கிவைக்கப்பட்ட நிகழ்வும் இதனுடன் இணைந்ததாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.