பரீட்சைப் புள்ளிப் பகுப்பாய்வில் சில வலயங்கள் மாறி சேர்க்கப்பட்டுள்ளன..!

எம்.ஏ.முகமட்-

ரீட்சைப் புள்ளிப் பகுப்பாய்வின் போது திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் சில வலயம் மாறி சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றை உரிய வலயங்களுக்குள் சேர்க்க ஆவண செய்யுமாறு பரீட்சை ஆணையாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கிண்ணியா கிழக்குவள அபிவிருத்தி மையம் (EFFORD) இக்கோரிக்கையை விடுத்துள்ளது.

இக்கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

பரீட்சைப் புள்ளிப் பகுப்பாய்வின் போது திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சில பாடசாலைகள் வலயங்கள் மாறி பட்டியல் படுத்தப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு கிண்ணியா வலயப் பாடசாலைகள் சில மூதூர் வலயத்தினுள் சேர்க்கப்பட்டுள்ளன. திருகோணமலை வலயப் பாடசாலைகள் சில கிண்ணியா வலயத்தினுள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதனால் வலயங்கள் தொடர்பான சரியான பகுப்பாய்வினைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது. மாகாண மற்றும் மாவட்ட பகுப்பாய்வுகளில் மாற்றம் இல்லாத போதிலும் வலயங்கள் தொடர்பான பகுப்பாய்வுகளில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

எனவே, வலயம் மாறியுள்ள பாடசாலைகளை உரிய வலயங்களுக்குள் சேர்த்து எதிர்காலத்தில் பகுப்பாய்வு செய்ய ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அக்கோரிக்கை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -