அறிக்கை ஒன்று வெளியிட்டு ஐக்கிய தேசியக் கட்சி இதனை தெரிவித்துள்ளது.
பிரதமர் கடந்த பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களையும் இன்று விசேட கலந்துரையாடலுக்கு அலரி மாளிகைக்கு அழைத்துள்ளார்.
இதற்கு முன்னர் இன்றய கூட்டத்தில் கலந்துக்கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்திருந்தது.
ஆனால் தற்போது இன்றய கூட்டத்தில் கலந்துக்கொள்ள போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
ஆனால் இந்த கலந்துரையாடலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட செயற்பாட்டு அரசியலில் ஈடுபடும் சகல அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சி தெரிவித்துள்ளது.
இவ்வாறான சூழலில் அர்த்தமுள்ள கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட முடியாது எனவும் அதனால் குறித்த கலந்துரையாடலில் கலந்துக்கொள்ள போவதில்லை ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
அதுபோல் ஆரம்பத்திலேயே குறித்த இக்கூட்டத்தில் தமது கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று ஜேவிபி அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் கொவிட் 19 வைரசை கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து பணிகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொவிட் 19 வைரசை கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து பணிகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.