கிழக்கை பௌத்தமயமாக்க எடுக்கும் பூர்வாங்க முயற்சியா?


தொல்பொருள் செயலணி குறித்து தவிசாளர் ஜெயசிறில் கேள்வி.
காரைதீவு நிருபர் சகா-
லங்கையை சிவபூமி என்றழைப்பர். அத்தகைய வரலாற்றுப்பாரம்பரியத்தைக்கொண்ட தமிழர் பூர்வீகத்தை இன்று கேள்விக்குரியதாக்கும் செயற்பாடு தொடங்கியுள்ளதா? தொல்பொருள் என்ற போர்வையில் கிழக்கை பௌத்தமயமாக்கும் முயற்சி முன்னெடுக்கப்படுகிறதா?

இவ்வாற கேள்வியெழுப்பினார் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில்.

அவர் இது விடயம் தொடர்பாக மேலும் கூறுகையில்:
இலங்கையின் தொல்பொருள் திணைக்களம் அனைவருக்கும் பொதுவானது. ஏனைய திணைக்களங்களைப்போல் அது நீதியாக செயற்பட வேண்டும் . அதைவிடுத்து பௌத்தத்தை மட்டும் முன்னிறுத்தி இத்திணைக்களம் செயற்படுவது முறையா? நீதியா? அப்படியெனின் பௌத்த தொல்பொருள் திணைக்களம் என பெயரை மாற்றிக்கொள்ளவேண்டும்.
இன்றைய கொரோனா நெருக்கடிக்குள் இந்த செயலணி தேவையா? இதன்பின்னால் ஏதோ சூட்சுமம் உள்ளது. இதற்கு தமிழர்கள் பலியாகக்கூடாது.
தொல்பொருள் ஆய்வினை மேற்கொள்ள ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள குழு கிழக்கில் தமிழரின் தொன்மையான அடையாளங்களை மறைத்து பௌத்தமயப்படுத்தும் வேலைகளை செய்கின்றதா எனும் கேள்விகள் எழுகிறது. இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
ஊதாரணமாக தொல்பொருள் இடங்கள் பாதுகாப்பிற்காகவும் ஆய்வுக்காகவும் என்றுகூறி திருகோணமலை மாவட்டத்தில் 74 இடங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 55 இடங்களும் அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக 248 இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவற்றில் அம்பாறை மாவட்டத்தில் 86 இடங்கள் தமிழர் பிரதேசங்களில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.கல்முனை தொடக்கம் பொத்துவில் வரையான 12ஆயிரம் ஏக்கர் காணிகள் தீகவாபி புனிதபூமிக்குச் சொந்தமானவை என்று தொல்பொருள் திணைக்களம் உரிமைகோரியுளளது. இது அப்பட்டமான உரிமை மீறலாகும்.
ஏற்கனவே எமது 49தமிழ்க்கிராமங்கள் இனவிரோதிகளால் பூண்டோடு அழிக்கப்பட்டு இன்று வேறுபல பெயர்களில் இயங்கிவருகின்றன. பல ஆலயங்கள் இருந்த இடம்தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளன. அடையாளங்கள் மறைக்கப்பட்டுள்ளன. பல தமிழ்க்கிராமங்கள் மறைக்கப்பட்டுள்ளன.

எமது அடையாளங்களை திரிபடைய செய்து பௌத்த அடையாளங்களாக காட்ட முயற்சிக்கக்கூடாது.எல்லோருக்கும் பொதுவான தொல்பொருள் திணைக்களம் எமது பாரம்பரிய தொன்மையான அடையாளங்களை மாற்றியமைக்காது நீதியாகவும் உண்மையாகவும் வெளிப்படையாகவும் செயற்பட வேண்டும் என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -