சமூகத்தின் குரலுக்காக முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும்.-எஹியாகான்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தேசிய பொருளாளர் என்ற அடிப்படையில் எனது பிரார்த்தனை எங்களது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் போடப்பட்டு இருக்கின்ற வேட்பாளர்களும் வெல்ல வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன்.
அதோடு நாளுக்கு நாள் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உடைய வாக்கு வங்கி தற்போது அதிகரித்த வண்ணம் இருக்கின்றன ஏனென்றால் எமது சமூகத்திற்காக
குரல் கொடுக்கின்ற கட்சி என்ற அடிப்படையில்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது மீண்டும் மிகவும் பேசும் பொருளாக
மக்கள் மத்தியில் ஒரு எழுச்சியின் பொருளாக இன்று முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பேசப்படுகின்றன.
ஆகையினால் எந்த ஒரு கொம்பன் வந்தாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உடைய பிரதிநிதித்துவத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைப்பவர்கள் அது ஒரு பகல் கனவாக நினைக்கட்டும்.
இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உடைய தலைமை உடைய வளர்ச்சியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வளர்ச்சியும் மிக முக்கியமாக எமது சமூகத்துக்கு அமையும் என்பது எமது மக்களுடைய இன்றைய நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள் ஆகையினால் நாம் எமது மக்களிடம் கேட்பது என்னவென்றால் சமூகத்தை பாதுகாப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிடுகின்றார் வேட்பாளர்களையும் நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று நாங்கள் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மாவட்டம் விட்டு மாவட்டம் மாற கூடாது என்ற சட்டம் இன்னும் இருக்கின்ற படியால் நாங்கள் தேர்தல் நெருங்குகின்ற போது கட்சி உடைய வளர்ச்சிக்காக நேரடியாக களத்தில் நின்று பாடுபடுவோம் என்பதையும் இந்த இடத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த அகோரமான வைரஸ் பரவல் காரணத்தினால் கஷ்டப்படுகின்றவர்களுக்கு நாங்கள் மாவட்டத்தில் இல்லாவிட்டாலும் எனது அணியினரை வைத்து நான் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொண்ட வண்ணம் இருக்கிறேன்.
அதேபோல எமது கட்சித் தலைவர் உட்பட எமது வேட்பாளர்கள் அனைவரும் அவர்களால் இயன்ற உதவிகளை களத்தில் நின்று செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் அவர்களுக்கும் எனது பிரார்த்தனை உரித்தாகட்டும்.
அன்புடன்
எ.சி.எஹியாகான்
தேசிய பிரதி பொருளாளர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -